கிராண்ட் செஸ் டூர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா

அமெரிக்​கா​வின் பேபியானோ கருனாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்
கிராண்ட் செஸ் டூர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா
Updated on
1 min read

செயின்ட் லூயிஸ்: கிராண்ட் செஸ் டூர் தொடரின் அரை இறுதி ஆட்​டங்​கள் அமெரிக்​கா​வின் செயின்ட் லூயிஸ் செஸ் கிளப்​பில் நடை​பெற்று வந்​தது. இதில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர்.பிரக்ஞானந்தா 19-9 என்ற புள்​ளி​கள் கணக்​கில் ஜெர்​மனி​யின் வின்​சென்ட் கீமரை வீழ்த்தி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறி​னார்.

2 கிளாசிக்​கல் போட்​டி​யின் முடி​வில் 9-3 என்ற புள்​ளி​கள் கணக்கில் முன்​னிலை​யில் இருந்த பிரக்​ஞானந்தா ரேப்​பிடு போட்டி​யில் வின்​சென்ட் கீமரை அடுத்​தடுத்த ஆட்​டங்​களில் தோற்​கடித்​தார். இதன் வாயி​லாக தனது முன்​னிலையை பிரக்ஞானந்தா 17-3 அதி​கரித்​துக் கொண்​டதுடன் இறு​திப் போட்டிக்கு முன்​னேறு​வதை உறுதி செய்​தார்.

தொடர்ந்து நடை​பெற்ற பிளிட்ஸ் பிரி​வின் முதல் ஆட்​டத்​தி​லும் பிரக்​ஞானந்தா வெற்​றியை வசப்​படுத்​தி​னார். இறு​திப் போட்​டிக்கு முன்​னேறும் வாய்ப்பை இழந்த வின்​சென்ட் கீமர் பிளிட்ஸ் பிரிவின் கடைசி 3 ஆட்​டங்​களி​லும் வெற்றி பெற்​றார். இறு​திப் போட்​டி​யில் பிரக்​ஞானந்​தா, நடப்பு சாம்​பிய​னான அமெரிக்க கிராண்ட் மாஸ்​ட​ரான பேபி​யானோ கரு​னா​வுடன் பலப்​பரீட்சை நடத்த உள்ளார்.

பேபியோனோ கருனா அரை இறுதி சுற்​றில், சகநாட்​டைச் சேர்ந்த வெஸ்ஸி சோவை 18-9 என்ற புள்​ளி​கள் கணக்​கில் வீழ்த்​தி​னார். இறு​திப் போட்​டி​யும் 2 கிளாசிக்​கல் ஆட்​டம், 2 ரேப்​பிடு ஆட்​டம், 4 பிளிட்ஸ் ஆட்​டத்தை உள்​ளடக்​கியது. இதில் சாம்​பியன் பட்​டம் வெல்​பவருக்கு சுமார் ரூ.1.91 கோடி பரி​சாக வழங்​கப்​படும். 2-வது இடத்தை பெறும் வீரர் ரூ.1.20 கோடியை பெறு​வார். 3-வது இடத்துக்​கான ஆட்டத்​தில் வின்​சென்ட் கீமர், வெஸ்​லி சோ மோது கின்றனர்​.

கிராண்ட் செஸ் டூர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா
அருணாச்சலில் கடத்தப்பட்ட 3 வயது குழந்தை உட்பட 19 சிறுவர், சிறுமிகள் மீட்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in