Last Updated : 27 Sep, 2017 02:36 PM

 

Published : 27 Sep 2017 02:36 PM
Last Updated : 27 Sep 2017 02:36 PM

தனக்கு வேண்டப்பட்டவர்களை ஸ்மித் தேர்வு செய்கிறார்: ஆஸி. முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ராட்னி ஹாக் சாடல்

உலக முன்னணி பேட்ஸ்மென்களை தன் வேகத்தால் அச்சுறுத்திய முன்னாள் ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் ராட்னி ஹாக், தற்போது தனது சூடான விமர்சனக்கணையை ஆஸ்திரேலிய கேப்டன் மீது செலுத்தியுள்ளார்.

அணித்தேர்வில் ஸ்மித் தனக்கு வேண்டப்பட்ட வீரர்களுக்கு இடமளித்து வருகிறார் என்றும் தொடர் தோல்விகளுக்காக ஆஸ்திரேலிய அணித்தேர்வை கடுமையாகச் சாடினார் ராட்னி ஹாக்.

“தனக்கு வேண்டியவர்களைத் தேர்வு செய்கிறார்கள், ஸ்மித் தேர்வாளராகச் செயல்படக் கூடாது. ஆஷ்டன் ஆகர், கார்ட்ரைட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், நிக் மேடிசன் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார், காரணம் அவர் ஸ்மித்தின் நண்பர். நண்பர்களையும் வேண்டியவர்களையும் தேர்வு செய்வதா?

கேப்டன் என் வழி தனி வழி என்று முடிவுகளை எடுக்க அனுமதிக்கப்படுகிறார். கிரிக்கெட் ஆஸ்திரேலியா மீது கடும் கேள்விகள் எழுகிறது. ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் மீதே கேள்விகள் எழுகின்றன.

வங்கதேசத் தொடரில் ஸ்டீவ் ஓகீஃப் தேர்வு செய்யப்பட்டார், ஆனால் ஜான் ஹாலண்ட்தான் அவர் இடத்தில் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஜான் ஹாலண்ட் தன்னால் அணியை வீழ்த்த முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஆனால் அவரை நாம் பார்க்க முடியவில்லை” என்று சாடினார் ராட்னி ஹாக்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x