Last Updated : 25 Sep, 2017 04:44 PM

 

Published : 25 Sep 2017 04:44 PM
Last Updated : 25 Sep 2017 04:44 PM

ஆஸி.க்கு எதிராக தொடர்ச்சியாக 3 ஒருநாள் தொடர்களில் வெற்றி: இந்திய அணி சாதனைத் துளிகள்

இந்தூர் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று 3-0 என்று ஆஸி.க்கு எதிரான தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி சில சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.

அவை வருமாறு:

இந்தூர் ஹால்கர் ஸ்டேடியத்தில் இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகளில் ஆடி அனைத்திலும் வென்றுள்ளது.

முதல் முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 3 இருதரப்பு தொடர்களை தொடர்ச்சியாக வென்றுள்ளது. 2010-ல் 1-0, 2013-14-ல் 3-2, நடப்பு தொடரில் 3-0 முன்னிலை.

ஜனவரி 23, 2016 முதல் செப்டம்பர் 24, 2017 வரை இந்தியா, ஆஸ்திரேலியாவை தொடர்ச்சியாக 4 முறை ஒருநாள் போட்டிகளில் வீழ்த்தியுள்ளது.

நேற்றைய 5 விக்கெட்டுகள் வித்தியாசத்திலான வெற்றி இந்திய அணியின் தொடர்ச்சியான 9 ஒருநாள் வெற்றியாகும். நவம்பர் 14, 2008 முதல் பிப்ரவரி 5, 2009 வரை தோனியின் தலைமையின் கீழ் இதே போல் தொடர்ச்சியாக 9 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது.

விராட் கோலி தலைமையின் கீழ் இந்திய அணியின் வெற்றி 81.08%. 30 வெற்றிக்ள், 7 தோல்விகல், ஒரேயொரு ஆட்டம் முடிவு தெரியாமல் முடிந்த்து.

ஜூன் 2016 முதல் செப்டம்பர் 2017 வரை இந்திய அணி ஒருநாள் தொடர்களில் 6 தொடர்களை தொடர்ச்சியாக வென்றுள்ளது. ஜிம்பாப்வே, நியூஸிலாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை வீழ்த்தியது.

2010-க்குப் பிறகு ஆஸ்திரேலியா 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 3 போட்டிகளில் தோல்வி தழுவுவது 3-வது முறையாகும்.

ஹர்திக் பாண்டியா தனது இரண்டாவது சிறந்த தனிப்பட்ட ஸ்கோரை நேற்று எடுத்தார், 72 பந்துகளில் 78 ரன்களை நேற்று விளாசினார்.

பாண்டியா எடுத்த 4 அரைசதங்களும் இந்த ஆண்டில் எடுக்கப்பட்டது. ஸ்ட்ரைக் ரேட் 100 ரன்களுக்கும் அதிகம்.

நடப்பு தொடரில் பாண்டியா 181 ரன்களை 60.33 என்ற சராசரியில் எடுத்துள்ளார். பாண்டியாதான் ரன்களில் முன்னிலை வகிக்கிறார்.

பாண்டியாவின் 3-வது ஆட்ட நாயகன் விருதாகும் இது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் 3077 ரன்களை 71 ஒருநாள் போட்டிகளில் எடுத்துள்ளார், தற்போது ரோஹித் சர்மா 26 போட்டிகளில் 1403 ரன்கள், 63.77 என்ற சராசரியுடன் சச்சினுக்கு அடுத்தாக ஆஸி.க்கு எதிரான சிறந்த பேட்ஸ்மெனாகத் திகழ்கிறார்.

முதல் விக்கெட்டுக்காக இந்திய தொடக்க வீரர்கள் இந்த ஆண்டு சதக்கூட்டணியை 6 முறை அமைத்துள்ளனர். ஒருநாள் போட்டிகளில் எந்த ஒரு அணியும் செய்யாத ஓராண்டுச் சாதனையாகும் இது.

ஏரோன் பிஞ்ச் ஒருநாள் போட்டிகளில் 8 சதங்களை அடித்துள்ளர், துணைக் கண்டத்தில் இவரது முதல் சதத்தை நேற்று இந்தூரில் அடித்தார்.

ஆஸ்திரேலியா தோற்ற போட்டிகளில் பிஞ்ச் 3 சதங்களை எடுத்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக ஏரோன் பிஞ்ச் ஒருநாள் போட்டிகளில் 14 இன்னிங்ஸ்களில் 704 ரன்களை 50.28 என்ற சராசரியில் எடுத்து சிறப்பாகத் திகழ்கிறார்.

அஜிங்கிய ரஹானே இந்தியாவில் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 1,000 ரன்களை பூர்த்தி செய்தார். இதில் ஒரு சதம் 8 அரைசதங்கள் அடங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x