Published : 01 Sep 2017 10:47 AM
Last Updated : 01 Sep 2017 10:47 AM

இலங்கை மீண்டும் பரிதாபத் தோல்வி: இந்தியா 4-0 என்று முன்னிலை

கொழும்புவில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் 376 ரன்கள் என்ற இமாலய இலக்கை எதிர்த்து இலங்கை அணி 42.4 ஓவர்களில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மீண்டும் ஒரு பரிதாபத் தோல்வியைச் சந்தித்தது.

இதன் மூலம் இந்திய அணி 4-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. தங்கள் சொந்த மண்ணில் மிகப்பெரிய ஒருநாள் தோல்வியை இலங்கை அணி சந்தித்தது.

உலகக்கோப்பை நேரடி தகுதி வாய்ப்பு பிரச்சினையில் இலங்கை:

வியாழக்கிழமை தோல்விக்குப் பிறகு இலங்கை அணி நேரடியாக உலகக்கோப்பை 2019-ல் தகுதி பெறுவது சிக்கலுக்குள்ளாகியுள்ளது. இந்த ஒருநாள் தொடரில் 2 போட்டிகளில் இலங்கை வென்றிருந்தால் நேரடியாகத் தகுதி பெற்றிருக்கும். ஆனால் இப்போது தொடர் தோல்விகளால் மே.இ.தீவுகள் அணியின் அயர்லாந்துக்கு எதிரான ஒரே ஒருநாள் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான மே.இ.தீவுகளின் 5 போட்டிகள் முடிவுகளை எதிர்நோக்கியுள்ளது.

ஆனாலும், மே.இ.தீவுகள் அயர்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்தை 5-0 என்று வீழ்த்த வேண்டும், இது மிகமிகக் கடினமே. செப்டம்பர்30 கட் ஆஃப் தேதிக்குள் இலங்கை நேரடியாகத் தகுதி பெற வாய்ப்புகள் சிக்கலுக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் வரும் ஞாயிறன்று இலங்கை இந்தியாவை வீழ்த்தினால் 88 புள்ளிகள் பெறும். ஆனால் மே.இ.தீவுகள் தனது 6 போட்டிகளிலும் வென்றால் அதுவும் 88 புள்ளிகளில் வந்து நிற்கும். அப்போது சில தசமப் புள்ளிகளில் இலங்கையை பின்னுக்குத் தள்ளி மே.இ.தீவுகள் தகுதி பெறும்.

ஒருவேளை இலங்கை ஞாயிறன்று நடைபெறும் 5-வது போட்டியிலும் தோற்றால் அயர்லாந்தை மே.இ.தீவுகள் வீழ்த்தி பிறகு இங்கிலாந்தை 4-1 என்று மே.இ.தீவுகல் வீழ்த்திவிட்டால் மே.இ.தீவுகள் நேரடியாகத் தகுதி பெற்று விடும். மே.இ.தீவுகள் நேரடியாக தகுதி பெற்றுவிட்டால் இலங்கை அணி தகுதிச் சுற்றுகளில் விளையாடி உலகக்கோப்பைக்குத் தகுதி பெற வேண்டும்.

மீண்டும் பரிதாபத் தோல்வி:

கடந்த முறை விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் எடுத்த போது ரோஹித் சர்மா இலங்கைக்கு எதிராக அதிரடி 261 ரன்களை விளாச இந்திய அணி 404 ரன்களை எடுத்தது. நேற்று அதன் பிறகு டாஸ் வென்று கோலி பேட் செய்தார், இப்போதும் இருவருமே இரட்டைச் சதம் அடிக்க வாய்ப்பிருந்தது. ஆனால் ஏதோ இலங்கையின் நல்லகாலம் இந்திய அணி 375 ரன்களுடன் முடிந்தது.

ஆஞ்சேலோ மேத்யூஸ் 70 ரன்களையும் சிறிவதனா 39 ரன்களையும் எடுத்தது போக மீதி வீரர்கள் 30 ரன்களைத் தாண்டவில்லை என்பதே இலங்கை பேட்டிங் பற்றி தொகுத்துக் கூற முடிவதாகும். பும்ரா, பாண்டியா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, தாக்குர், படேல் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x