Published : 28 Sep 2017 10:50 AM
Last Updated : 28 Sep 2017 10:50 AM

கால் இறுதியில் தீபிகா பல்லிகல்

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் சான் பிரான்சிஸ்கோ ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பல்லிகல், போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள இங்கிலாந்தின் எமிலி விட்லாக்கை எதிர்த்து விளையாடினார். இதில் தீபிகா 11-9, 11-8, 7-11, 11-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார்.

சென்னையைச் சேர்ந்த தீபிகா பல்லிகல் கால் இறுதியில், உலகத் தரவரிசையில் 21-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஒலிவியா பிளட்ச்போர்டுடன் மோதுகிறார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x