Published : 17 Feb 2023 06:24 PM
Last Updated : 17 Feb 2023 06:24 PM

மார்ச் 31-ல் IPL 2023 தொடக்கம்: முதல் போட்டியில் சென்னை Vs குஜராத் - சிஎஸ்கே அட்டவணை

கோப்புப்படம்

மும்பை: நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் எதிர்வரும் மார்ச் 31-ம் தேதி அன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை செய்யவுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்தப் போட்டி அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது. 10 அணிகளும் 7 போட்டிகள் சொந்த மைதானத்திலும், 7 போட்டிகள் வெளியூரிலும் லீக் சுற்றில் விளையாட உள்ளன.

மொத்தம் 70 லீக் போட்டிகள். கடைசி லீக் போட்டி மே 21-ம் தேதி நடைபெறுகிறது. மே 28-ம் தேதி இறுதிப்போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

12 மைதானங்களில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள்: அகமதாபாத், மொஹாலி, லக்னோ, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, கவுகாத்தி மற்றும் தர்மசாலாவில் போட்டிகள் நடைபெறுகின்றன. கடந்த சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. போட்டிகள் அனைத்தையும் ஜியோ சினிமா மொபைல் செயலியில் இலவசமாக பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2023 குரூப்கள்: 10 அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. | குரூப் ஏ: மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்டஸ். | குரூப் பி: சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகள்:

  • போட்டி 1: மார்ச் 31 vs குஜராத் டைட்டன்ஸ் - அகமதாபாத்
  • போட்டி 2: ஏப்ரல் 3 vs லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் - சேப்பாக்கம்
  • போட்டி 3: ஏப்ரல் 8 vs மும்பை இந்தியன்ஸ் - மும்பை
  • போட்டி 4: ஏப்ரல் 12 vs ராஜஸ்தான் ராயல்ஸ் - சேப்பாக்கம்
  • போட்டி 5: ஏப்ரல் 17 vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பெங்களூரு
  • போட்டி 6: ஏப்ரல் 21 vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - சேப்பாக்கம்
  • போட்டி 7: ஏப்ரல் 23 vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கொல்கத்தா
  • போட்டி 8: ஏப்ரல் 27 vs ராஜஸ்தான் ராயல்ஸ் - ஜெய்ப்பூர்
  • போட்டி 9: ஏப்ரல் 30 vs பஞ்சாப் கிங்ஸ் - சேப்பாக்கம்
  • போட்டி 10: மே 4 vs லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் - லக்னோ
  • போட்டி 11: மே 6 vs மும்பை இந்தியன்ஸ் - சேப்பாக்கம்
  • போட்டி 12: மே 10 vs டெல்லி கேபிடல்ஸ் - சேப்பாக்கம்
  • போட்டி 13: மே 14 vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சேப்பாக்கம்
  • போட்டி 14: மே 20 vs டெல்லி கேபிடல்ஸ் - டெல்லி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x