Last Updated : 15 May, 2017 09:37 AM

 

Published : 15 May 2017 09:37 AM
Last Updated : 15 May 2017 09:37 AM

நியூஸி. ஹாக்கி இந்தியா தோல்வி

நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி 1 - 4 என்ற கோல்கணக்கில் தோல்வியடைந்தது.

நியூஸிலாந்துக்கு எதிராக 5 ஹாக்கி போட்டிகளில் ஆடுவதற்காக இந்திய மகளிர் ஹாக்கி அணி, அந்நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஹாக்கி போட்டி புகேகோஹே நகரில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 1 - 4 என்ற கோல்கணக் கில் தோல்வியை சந்தித்தது.

இப்போட்டியில் நியூஸி லாந்து அணிக்காக ஜோர்டன் கிராண்ட், ஒலிவா மெர்ரி, ரேச்சல் மெக்கான், டானா ரிச்சி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்திய அணிக்காக அனுபா பர்லா ஒரு கோல் அடித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x