Published : 24 Jan 2023 05:47 AM
Last Updated : 24 Jan 2023 05:47 AM

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - கால் இறுதியில் நோவக் ஜோகோவிச்

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் 4-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியஓபன் டென்னிஸ் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 8-வதுநாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் 4-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 22-ம் நிலை வீரரானஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை எதிர்த்து விளையாடினார்.

2 மணி நேரம் 6 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-2, 6-1, 6-2 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். கால் இறுதி சுற்றில் 5-ம் நிலை வீரரான ரஷ்யாவின் ஆந்த்ரே ரூப்லெவை எதிர்கொள்கிறார் ஜோகோவிச். ஆந்த்ரே ரூப்லெவ் 4-வது சுற்று ஆட்டத்தில் 6-3, 3-6, 6-3, 4-6, 7-6 (11-9) என்ற செட் கணக்கில் 9-ம் நிலை வீரரான கனடாவின் ஹோல்கர் ரூனை போராடி வென்றார். இந்த ஆட்டம் 3 மணிநேரம் 37 நிமிடங்கள் நடைபெற்றது.

மற்ற ஆட்டங்களில் அமெரிக்காவின் பென் ஷெல்டன், சகநாட்டைச் சேர்ந்த ஜேஜே வுல்ஃப்-ஐ 6-7 (5-7), 6-2, 6-7 (4-7), 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கிலும் அமெரிக்காவின் டாமி பால் 6-2, 4-6, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் 24-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ராபர்டோ பவுதி ஸ்டாவையும் தோற்கடித்து கால் இறுதி சுற்றில் கால் பதித்தனர். கால் இறுதி சுற்றில் பென் ஷெல்டன், டாமி பால் நேருக்கு நேர் மோதுகின்றனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் 5-ம் நிலை வீராங்கனையான பெல்லாரசின் சபெலங்கா 7-5, 6-2 என்ற நேர் செட்டில் 12-ம் நிலை வீராங்கனையான சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிக்கையும், 30-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6-0, 6-4 என்ற நேர் செட்டில் 23-ம் நிலைவீராங்கனையான சீனாவின் ஹவாய் ஜாங்கையும் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

4-ம் நிலை வீராங்கனையான பிரான்ஸின் கரோலின் கார்சியா 6-7 (3-7), 4-6 என்ற செட் கணக்கில் போலந்தின் மெக்டா லின்னெட்டிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். மற்றொரு ஆட்டத்தில் குரோஷியாவின் டோனா வெகிக்6-2, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் செக்குடியரசின் லிண்டா ஃப்ருஹ்விர்டோவாவை வீழ்த்திகால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

கால் இறுதியில் சானியா ஜோடி: கலப்பு இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடியானது ஜப்பானின் நினோமியா, உருகுவேயின் ஏரியல் பெஹர்ஜோடியை எதிர்த்து விளையாடியது. ஒரு மணி நேரம் 17 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி 6-4, 7-6 (11-9) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x