பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பை | தொடர்ச்சியாக மூன்று போட்டிகளை வென்ற இந்தியா

இந்திய அணி வீரர்கள்
இந்திய அணி வீரர்கள்
Updated on
1 min read

கட்டாக்: பார்வையற்றோருக்கான டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளை பெற்று அசத்தியுள்ளது. இன்று வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

பார்வையற்றோருக்கான டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 5-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆஸ்திரேலியா, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, இலங்கை மற்றும் இந்திய அணிகள் இதில் பங்கேற்றுள்ளன.

மொத்தமாக 24 போட்டிகள் இந்த தொடரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்த தொடரில் பங்கேற்கவில்லை. இதுவரை 13 போட்டிகள் நடந்துள்ளன.

நேபாளம், ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் போன்ற அணிகளை அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணி வீழ்த்தியுள்ளது. அதன் மூலம் 6 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் வரிசையாக 4 வெற்றிகளை பதிவு செய்துள்ள இலங்கை அணி உள்ளது.

இதற்கு முன்னர் 2012 மற்றும் 2017 வாக்கில் பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட்டுள்ளது. அந்த இரண்டிலும் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in