Published : 06 Dec 2022 04:11 PM
Last Updated : 06 Dec 2022 04:11 PM

கடந்த 10 ஆண்டுகளில் சொந்த மண்ணில் டெஸ்ட் அணிகளின் வெற்றி விகிதம்: இந்தியாவின் செயல்பாடு எப்படி?

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி | கோப்புப்படம்

சென்னை: கடந்த 10 ஆண்டுகளில் சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சர்வதேச கிரிக்கெட் அணிகளின் வெற்றி விகிதம் குறித்த தரவு வெளியாகி உள்ளது. இதில், இந்தியா உட்பட முக்கிய அணிகளின் செயல்பாடு எப்படி உள்ளது என்பதைப் பார்ப்போம்.

கிரிக்கெட் விளையாட்டின் அசல் வடிவம் என டெஸ்ட் கிரிக்கெட் போற்றப்பட்டு வருகிறது. ஒருநாள், டி20 மற்றும் ப்ரான்சைஸ் கிரிக்கெட் வரவுகளால் டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து காரசாரமாக முன்பு விவாதிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஐசிசியின் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் அந்த விவாதங்களை தவிடு பொடியாக்கியது. அதே நேரத்தில் மற்ற வடிவ கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் அதே வரவேற்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கும் ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர்.

இந்தச் சூழலில் கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக விளையாடி வரும் அணிகளின் வெற்றி விகிதம் சொந்த மண்ணில் எப்படி உள்ளது? - இதோ வெற்றி விகிதம்...

  • வங்கதேசம் - 30.00%
  • மேற்கிந்திய தீவுகள் - 40.00%
  • பாகிஸ்தான் - 44.44%
  • இலங்கை - 50.00%
  • இங்கிலாந்து - 58.20%
  • நியூஸிலாந்து - 63.41%
  • தென் ஆப்பிரிக்கா - 66.66%
  • ஆஸ்திரேலியா - 70.83%
  • இந்தியா - 80.95%

கடந்த 2014 வாக்கில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆனார் விராட் கோலி. அவர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட்டுக்கு வலு சேர்த்தது இந்த காலகட்டத்தில்தான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x