Published : 30 Dec 2016 10:30 AM
Last Updated : 30 Dec 2016 10:30 AM

பல்கலைக்கழக கபடி போட்டி தொடக்கம்

தமிழக அளவிலான 28 பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டி திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று தொடங்கியது.

தொடக்க விழாவில், போட்டி களில் பங்கேற்கும் 28 பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் மைதானத்தில் அணி வகுத்தனர். துணைவேந்தர் கி.பாஸ்கர் தலைமை வகித்தார். விளையாட்டு இயக்குநர் ச.சேது வரவேற்றார். திருநெல்வேலி மாவட்ட எஸ்பி வி.விக்ரமன் தொடங்கி வைத்தார். போட்டி அட்டவணையை பதிவாளர் ஜான் டி பிரிட்டோ வெளி யிட்டார்.

ஆண்கள் பிரிவில், முதல் போட்டியில் சென்னை பல்கலைக் கழகம், 65-22 என்ற புள்ளிக் கணக்கில் கோயம்புத்தூர் கற்பகம் பல்கலைக்கழக அணியை வெற்றி கண்டது. பெண்கள் பிரிவில் தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக் கழகம், 34-19 என்ற புள்ளிக் கணக்கில் அண்ணாமலை பல் கலைக்கழக அணியை தோற் கடித்தது.

போட்டிகள் இன்றும் நடைபெறு கின்றன. மாலையில் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. வெற்றி பெறும் அணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் சான்றி தழ்கள், பரிசுகளை வழங்குகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x