Published : 18 Nov 2016 10:10 AM
Last Updated : 18 Nov 2016 10:10 AM

கொல்கத்தா ஆட்டம் டிரா

ஐஎஸ்எல் தொடரில் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் அத்லெடிகோ டி கொல்கத்தா - நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 5-வது நிமிடத் திலேயே நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் முதல் கோலை அடித்தது.

நிக்கோலஸ் வெலஸ் அடித்த இந்த கோலால் முதல் பாதியில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணி 1-0 என முன்னிலை பெற்றது. கடைசி நிமிடத்தில் கொல்கத்தா வீரர் ஹூமி, போஸ்டிகா உதவியுடன் கோல் அடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

இன்றைய ஆட்டம்

தொடரில் இன்று இரவு 7 மணிக்கு புனேவில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ்-எப்சி புனே சிட்டி அணிகள் மோதுகின்றன.

டெல்லி அணி 10 ஆட்டத்தில் 17 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெற்று அரை இறுதிக்கான வாய்ப்பை பலப்படுத்திக்கொள்ள முயற்சிக்கும். புனே அணி 10 ஆட்டத்தில் 12 புள்ளிகளுடன் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x