Published : 01 Oct 2016 09:15 AM
Last Updated : 01 Oct 2016 09:15 AM

ஹாக்கியில் இந்திய அணி பட்டம் வென்றது

18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை ஹாக்கியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

டாக்காவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இதன் மூலம் இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் வங்கதேசத்திடம் அடைந்த தோல்விக்கு இந்திய அணி பழிதீர்த்துக்கொண்டது. முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்தன.

2-வது பாதி ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இந்திய அணி மேலும் இரு கோல்கள் அடித்தது. ஆனால் அடுத்த 13 நிமிடங்களில் வங்கதேச அணி 3-3 சமநிலையை எட்டியது.

அடுத்தடுத்த நிமிடங்களில் இரு அணிகள் தரப்பிலும் மேலும் தலா ஒரு கோல்கள் அடிக்கப்பட ஆட்டம் 4-4 என பரபரப்பானது. ஆட்டம் முடிவடைய 20 விநாடிகள் மட்டுமே இருந்த நிலையில் இந்திய அணி 5-வது கோலை அடித்து வாகை சூடியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x