Published : 19 Jun 2014 04:58 PM
Last Updated : 19 Jun 2014 04:58 PM
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷான் டெய்ட், இந்திய மாடல் அழகி மஷூம் சின்கா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
4 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர், இந்நிலையில் ஜூன் 12ஆம் தேதி இருவருக்கும் மும்பையில் திருமணம் நடந்தது. டெய்ட்டின் ஆஸ்திரேலிய நண்பர்கள் திருமணத்திற்கு வருகை தந்தனர். இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஜாகீர் கான் மற்றும் யுவ்ராஜ் ஆகியோர் இந்தத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கடந்த ஆண்டு இருவரும் பாரீஸில் இருந்தபோது ஷான் டெய்ட், மஷுமிடம் திருமணம் செய்து கொள்வது பற்றி தனது விருப்பத்தைத் தெரிவித்தார் என்று மஷூம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT