Published : 26 Aug 2022 06:31 AM
Last Updated : 26 Aug 2022 06:31 AM

ஆசிய கோப்பை கிரிக்கெட் - ஹாங்காங் தகுதி

மஸ்கட்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு ஹாங்காங் அணி தகுதி பெற்றுள்ளது. அந்த அணி லீக் சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடன் மோத உள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை (27-ம் தேதி) ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் கடைசி அணியாக ஹாங்காங் தேர்வாகி உள்ளது. அந்த அணி தகுதி சுற்றின் கடைசி ஆட்டத்தில் நேற்று முன்தினம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை தோற்கடித்தது.

148 ரன்கள் இலக்கை துரத்திய ஹாங்காங் அணி 19 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக யாசிம் முர்டசா 43 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் விளாசினார். இந்த வெற்றியின் மூலம் ஹாங்காங் பிரதான சுற்றில் குரூப் ஏ-யில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடன் 3-வது அணியாக இணைந்துள்ளது. அந்த அணி வரும் 31-ம் தேதி இந்தியாவுடனும், செப்டம்பர் 2-ம் தேதி பாகிஸ்தானுடனும் மோதுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x