Published : 04 Oct 2016 10:06 AM
Last Updated : 04 Oct 2016 10:06 AM

ஆசிய பைக் பந்தயம்

ஆசிய ரோடு ரேசிங் சாம்பியன் ஷிப் மற்றும் ஆசிய ட்ரீம் கோப் பைக்கான பைக் பந்தயத்தின் 5-வது சுற்று டெல்லியில் உள்ள புத்தா சர்வதேச சர்க்யூட்டில் நடைபெற்றது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்த 19 வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் இருந்து ஹரி கிருஷ்ணன், ராஜீவ் சேது, மதன குமார் ஆகியோர் பங்கேற்றனர். ஆசிய ட்ரீம் கோப்பைக்கான பந்தயத்தில் ஆஸ்திரேலியாவின் புராக் பியர்சன் பந்தய தூரத்தை 17:01:625 விநாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார்.

தாய்லாந்தின் மோன்ட்ரி 17:02:138 விநாடிகளில் 2-வது இடத்தையும், மலேசியாவின் ஹபிஸ் நோரஸ்மான் 17:02:540 விநாடிகளில் 3-வது இடத்தையும் கைப்பற்றினர். இந்தியாவின் ஹரி கிருஷ்ணன் 11-வது இடத்தையும், மதன குமார் 15-வது இடத்தையும் பிடித்தனர்.

சூப்பர் ஸ்போர்ட்ஸ் 600 சிசி பிரிவில் மேற்கு ஆஸ்திரேலியா வின் அந்தோனி கெய்த் 31:03:153 விநாடிகளில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தார்.

ஹோன்டா சிபிஆர் 250 சிசி ஓபன் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் பந்தய தூரத்தை 12:52:326 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். மற்ற இந்திய வீரர்களான அனிஷ் டி.ஷெட்டி 12:52:386 விநாடிகளில் 2-வது இடத்தையும், மதன குமார் 12.52:517 விநாடிகளில் 3-வது இடத்தையும் கைப்பற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x