Published : 26 Jul 2022 09:27 PM
Last Updated : 26 Jul 2022 09:27 PM
வேட்டா (Vantaa): டி20 கிரிக்கெட்டில் சதம் விளாசிய இளம் வயது பேட்ஸ்மேன் என்ற சாதனையை சர்வதேச கிரிக்கெட் களத்தில் படைத்துள்ளார் பிரான்ஸ் நாட்டு பேட்ஸ்மேன் கஸ்டவ் மெக்கென் (Gustav McKeon). 18 வயதான அவர் இந்த சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 2024 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைக்கான ஐரோப்பா துணை பிராந்திய தகுதிப் போட்டி பின்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டன. நேற்று (ஜூலை 25) நடைபெற்ற இந்தப் போட்டியில் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது சுவிட்சர்லாந்து.
பிரான்ஸ் அணி டாஸ் வென்று, பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கட்ஸவ் ‘ஒன் மேன் ஆர்மி’ போல செயல்பட்டு வேக வேகமாக ரன் சேர்த்தார். 61 பந்துகளில் 109 ரன்களை சேர்த்தார் அவர். இதில் 9 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் சதம் விளாசிய இளம் வயது பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
பிறந்து 18 ஆண்டுகள் மற்றும் 280 நாட்களில் இந்த சாதனையை படைத்துள்ளார் அவர். இதற்கு முன்னர் ஆப்கானிஸ்தானின் ஹஸ்ரதுல்லாஹ் ஜசாய் வசம் இந்த சாதனை இருந்தது. அவர் 20 ஆண்டுகள் 337 நாட்களில் இந்த சாதனையை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொடரை வெல்லும் அணி ஐரோப்பிய தகுதி சுற்றில் விளையாட வேண்டும். 2024 டி20 உலகக் கோப்பை மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
French batter Gustav Mckeon became the youngest Men's player to score a T20I Century (18 years and 280 days). #ICCEuropeQualifiers #CricketTwitter #ICC #France pic.twitter.com/k7zKcBjtcv
— Extra Pace (@Extra_Pace) July 26, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT