Published : 07 Jun 2022 07:31 AM
Last Updated : 07 Jun 2022 07:31 AM

ஹாக்கி பைவ்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா - இறுதிப் போட்டியில் போலந்தை வீழ்த்தியது

ஹாக்கி பைவ்ஸ் சர்வதேச ஹாக்கித் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆடவர் அணி.

லாசன்னே: சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஹாக்கி பைவ்ஸ் சர்வதேச ஹாக்கித் தொடரில் இந்திய ஆடவர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

சர்வதேச ஹாக்கி சம்மேளனம் ஒரு அணிக்கு 5 வீரர்களை கொண்ட ஹாக்கி பைவ்ஸ் தொடரை சுவிட்சர்லாந்தின் லாசன்னே நகரில் நடத்தியது. இதன் ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் இந்தியா - போலந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி 6-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

இந்திய அணி சார்பில் 11 மற்றும் 19-வது நிமிடங்களில் பாபி சிங் தாமியும், முகமது ரஹீல் 13 மற்றும் 17-வது நிமிடங்களிலும் சஞ்ஜய் 8-வது நிமிடத்திலும், கேப்டன் குரிந்தர் சிங் 9-வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர்.

போலந்து அணி தரப்பில் மேட்யூஸ் நோகோவ்ஸ்கி (முதல் நிமிடம்), ராபர்ட் பாவ்லக் (5-வது நிமிடம்), வோஜ்சிக் ருட்கோவ்ஸ்கி (5-வது நிமிடம்), ஜசெக் குரோவ்ஸ்கி (18-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்த ஆட்டத்தில் இந்திய அணி தொடக்கத்தில் 0-3 என பின்தங்கியிருந்தது. முதல் 5 நிமிடங்களிலேயே கடும் பின்னடைவை சந்தித்த போதிலும் அதன் பின்னர் ஆக்ரோஷமாக விளையாடி அடுத்தடுத்து கோல்களை அடித்து போலந்து அணிக்கு கடும் சவால் அளித்து சாம்பியன் பட்டம் வென்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x