Published : 01 Apr 2016 09:31 AM
Last Updated : 01 Apr 2016 09:31 AM

டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் 2-வது முறையாக பட்டம் வெல்ல காத்திருக்கும் அணிகள்

6-வது டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக ஒரு சாதனை நடைபெற உள்ளது. டி20 உலகக் கோப்பையை இதுவரை எந்த ஓர் அணியும் இருமுறை வென்ற தில்லை. ஆனால் தற்போது இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இங்கிலாந்து, மேற் கிந்திய தீவுகள் ஆகிய இரு அணிகளும் ஏற்கெனவே ஒரு முறை டி 20 உலகக் கோப்பையை வென்றுள்ளன. இதில் எந்த அணி கோப்பையை வென்றாலும் 2-வது முறையாக கோப்பை வெல்லும் முதல் அணி என்ற சாதனையை படைக்கும்.

இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்ற நிலையில் முதல் சுற்றில் தேர்வான வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இந்தியா, ஆஸ்தி ரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து ஆகிய அணிகளுடன் இணைந்து சூப்பர் 10 சுற்றில் மோதின.

சூப்பர் 10 சுற்று முடிவில் நியூஸிலாந்து, இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை தோற்கடித்தது.

இதன் மூலம் டி 20 உலகக் கோப்பையில் 2-வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து. முன்னதாக 2010-ல் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. 2-வது அரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் இறுதிப்போட்டியில் கால்பதித்தது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி இறுதிப் போட் டிக்கு முன்னேறுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்னர் 2012-ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.

இதுவரை நடைபெற்ற ஐந்து டி 20 உலகக் கோப்பை தொடர் களிலும் வெவ்வேறு அணிகளே சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. ஆனால் இந்த முறை 2-வது முறையாக ஒர் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைக்க உள்ளது.

சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணியை தீர்மானிக்கும் இறுதி போட்டி 3-ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறு கிறது.

இதுவரை சாம்பியன்கள்

2007 இந்தியா

2009 பாகிஸ்தான்

2010 இங்கிலாந்து

2012 மேற்கிந்தியத் தீவுகள்

2014 இலங்கை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x