Published : 09 Apr 2022 07:06 AM
Last Updated : 09 Apr 2022 07:06 AM

கொரியா ஒபன் அரை இறுதியில் சிந்து, ஸ்ரீகாந்த்

சன்சியோன்: தென் கொரியாவின் சன்சி யோன்நகரில் நடைபெற்று வரும் கொரியா ஒபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் உலகத் தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள இந்தியாவின் கிடாம்பி காந்த், 78-வதுஇடத்தில் உள்ள சன் வான்ஹோவை 21-12, 18-21, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். அரை இறுதி சுற்றில் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டியை எதிர்கொள்கிறார் காந்த்.

மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, தாய்லாந்தின் பூசனன் ஓங்பாம்ருங்பனை 21-10, 21-16 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். அரை இறுதி சுற்றில் தென் கொரியாவின் அன் சேயோங்குடன் மோதுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x