Published : 29 Jan 2022 11:09 AM
Last Updated : 29 Jan 2022 11:09 AM

IND vs WI | இந்திய அணிக்கு பொல்லார்ட் சரியான சவாலாக இருப்பார்: டேரன் சமி கணிப்பு

கிரோன் பொல்லார்ட்.

இந்திய அணிக்கு பொல்லார்ட் சரியான சவாலாக இருப்பார் என மேற்குஇந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி கணித்துள்ளார்.

அடுத்த மாதம் மேற்கிந்திய தீவு அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர் நடைபெறுகிறது. பிப்ரவரி 6 ஆம் தேதி அகமதாபாத்தில் நரேந்தி மோடி மைதானத்தில் போட்டிகள் தொடங்குகின்றன. மேற்கிந்திய தீவு அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழு தேர்ந்தெடுத்துள்ள அணியில் இளம் முகங்களுக்கு அதிக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மேற்குஇந்திய தீவுகள் அணி கேப்டன் கிரோன் பொல்லார்ட் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டி20 உலகக் கோப்பையை வென்ற ஒரே மே.இ.தீவுகள் கேப்டனான டேரன் சமி தனது கருத்துகளை முன்வைத்துள்ளார்.

டேரன் சமி

அவர் கூறுகையில், "இந்திய அணிக்கு பொல்லார்ட் சவாலாக இருப்பார் என நான் நம்புகிறேன். அவர் இந்தியாவில் நிறைய விளையாடியுள்ளார். அந்த அனுபவம் கைக்கொடுக்கும். அவருக்கு இந்திய வீரர்களின் நிலையும் தெரியும். இங்கிலாந்தில் தற்போது நடைபெறும் தொடரில் மே.இ.தீவுகள் சில புதிய திறமைசாலிகளை அடையாளம் கொண்டுள்ளது. அது இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் கைக்கொடுக்கும். அதேபோல் கெமார் ரோச் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளரான கெமார், சில பிரேக்த்ரூ ஆட்டத்தை நிச்சயம் வெளிப்படுத்துவார். நமக்கு இந்திய விக்கெட்டுகளை வீழ்த்தும் பவுலர்கள் தேவை. அந்த அம்சம் கொண்டவர்தான் கெமார். அவரது டெஸ்ட் விக்கெட் சாதனைகள் அதற்குச் சான்று. இந்திய சுற்றுப்பயணத்துக்கான அணியைத் தேர்வு செய்த டெஸ்மான் ஹெய்னஸ் தலைமையிலான தேர்வு வாரியத்துக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா ஒயிட் வாஷானது குறித்த கேள்விக்கு, அதைவைத்து வரவிருக்கும் போட்டியை நிர்ணயிக்க முடியாது. இந்திய அணி சொந்த மண்ணில் எப்போதும் கெத்தாக இருக்கும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x