Published : 20 Dec 2015 01:07 PM
Last Updated : 20 Dec 2015 01:07 PM

நியூஸிலாந்து தொடரில் இடம்பெறுகிறார் முகமது அமீர்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சல்மான்பட், முகமது அமீர், முகமது ஆஷிப் ஆகியோர் கடந்த 2011ம் ஆண்டு இங்கிலாந்து போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சிக்கினர். சிறைத் தண்டை பெற்ற இவர்களுக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க 5 ஆண்டுகள் தடைவித்தது ஐசிசி. தடை காலம் முடிந்து முகமது அமீர் கடந்த செப்டம்பர் மாதம் முதல் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் 23 வயதான அவரை மீண்டும் தேசிய அணிக்கு தேர்வு செய்ய பாக். வாரியம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக வரும் 21ம் தேதி முதல் ஜனவரி 7ம் தேதி வரை லாகூரில் நடைபெறும் பயிற்சி முகாம் மற்றும் உடல் தகுதி சோதனையில் முகமது அமீர் கலந்து கொள்கிறார்.

இந்த முகாமில் கலந்து கொள்ளும் பாக். வீரர்கள் பட்டியலை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இதில் முகமது அமீர் இடம் பெற்றுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டில், "எனது ரசிகர்கள், குடும் பத்தினர், நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர் கள் எப்போதும் எனக்கு ஆதரவாக வும், என்னை ஊக்கப்படுத்தியும் வந்துள்ளனர். என்னால் முடிந்த வரை 100 சதவீதம் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் விளையாடு வேன்" என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணி ஜனவரி மாதம் நியூஸிலாந்தில் சுற்றுப்பய ணம் செய்து தலா 3 ஒருநாள் போட்டி, டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கு தயாராகும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பயிற்சி முகாமில் தான் முமகது அமீர் கலந்து கொள்கிறார். இதனால் அவர் நியூஸிலாந்து தொடருக்கு தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x