Last Updated : 25 Apr, 2021 06:52 AM

 

Published : 25 Apr 2021 06:52 AM
Last Updated : 25 Apr 2021 06:52 AM

மோரிஸ், சாம்ஸன் பொறுப்பான ஆட்டம்: ராஜஸ்தானுக்கு 2-வது வெற்றி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் படுமட்டமான பேட்டிங்

கொல்கத்தா அணியின் சரிவுக்கு காரணமாக அமைந்த ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சாளர் கிறிஸ் மோரிஸ் | படம் உதவி ட்விட்டர்

மும்பை


மோரிஸின் பந்துவீச்சு, சாம்ஸனின் பொறுப்பான ஆட்டம் ஆகியவற்றால் மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 18-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் சேர்த்தது. 134 ரன்கள் ேசர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 போட்டிகளில் 2 வெற்றி, 3 தோல்வி என 4 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது. அதேநேரம், 5 போட்டிகளில் ஒரு வெற்றி, 4 தோல்வி என 8-வது இடத்துக்கு கொல்கத்தா அணி தள்ளப்பட்டுள்ளது.

ஆட்டநாயகன்

4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ் வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் மோரிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். தன்னுடைய 4 ஓவர்களில் மொத்தம் 18 டாட் பந்துகளை வீசியுள்ளார்.

கிறிஸ் மோரிஸ் பந்துவீ்ச்சு உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர் அல்ல ம் விளையாடுவதற்கு அவ்வளவு கடினமானது அல்ல, பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும் பந்துவீச்சாளரும் அல்ல. தற்போதுள்ள நிலவரப்படி அவர் தென் ஆப்பிரிக்க அணியில்கூட இல்லை. ஆனால், மோரிஸ் பந்துவீ்ச்சைக் கூட அடிக்கமுடியாமல்கூட ஆட்டமிழந்து சென்றது என்பது கொல்கத்தா அணி பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தைத்தையும் " இன்டென்ட்" இல்லாததையும் காட்டுகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வெளிநாட்டு வீரர்களில் ஒரே போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் 3-வதுவீரர் எனும் பெருமையை மோரிஸ் பெற்றுள்ளார். இதற்கு முன் ஜேம்ஸ் ஃபாக்னர், சொகைல் தன்வீர் எடுத்திருந்தனர்.

இந்தப் போட்டியில் கிறிஸ் மோரிஸ் 18 டாட் பந்துகளை வீசினார். இதற்கு முன் கடைசியாக 2008ம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கு எதிராக ஷேன் வார்ன் மற்றும் ஆர்சிபி அணிக்கு எதிராக சொகைன் தன்வீரும் 18 டாட்பந்துகளை வீசியிருந்தனர்.

2018ம் ஆண்டு தடைக்குப்பின் மீண்டும் விளையாட வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2-வது முறையாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது. 4 முறை இதற்கு முன் தோல்வி அடைந்துள்ளது. கடைசியாக 2019ம் ஆண்டு கொல்கத்தாவில் 3 விக்கெட்டில் கொல்கத்தாவை வென்றது.

கொல்கத்தாவுக்கு ராசியில்லை

மும்பை வான்ஹடேவுக்கும் கொல்கத்தா அணிக்கும் ராசியே இல்லை. கடைசியாக கடந்த 2012ம் ஆண்டு வான்ஹடேவில் கொல்கத்தா அணி வென்றது, அதன்பின் ஏற்ககுறைய 9 ஆண்டுகளாக வான்ஹடே மைதானத்தில் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் கொல்கத்தா அணி தோற்றுள்ளது.

விமர்சனம்

ராஜஸ்தான் அணியைப் பொருத்தவரை சிஎஸ்கே அணிக்கு எதிராக ஒரு விக்கெட்டை வீழ்த்த முடியாமல் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தியதாக கடும் விமர்சனத்தைச் சந்தித்தனர். சிஎஸ்கே வீரர் கெய்க்வாட்டுக்கும், டூப்பிளசிஸ்க்கும் பேட்டிங் பயிற்சி அளித்ததுபோல், அல்வா சாப்பிடுவது போன்ற பந்துவீச்சை வெளிப்படுத்தியதாக விமர்சிக்கப்பட்டது.

ஆனால்,அடுத்த போட்டியில் மீண்டு எழுந்துள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக அனைத்துப் பந்துவீச்சாளர்களும் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.இந்த ஆட்டத்தில் பந்துவீசிய ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் 36 சதவீதம் ஸ்லோ பால்களை பயன்படுத்தியுள்ளனர்.

கொல்கத்தா அணியினரை ரன்களை அடிக்கவிடாமல், உனத்கட், முஸ்தபிசுர் ரஹ்மான், சக்காரியா எனக் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். குறிப்பாக பவர்ப்பளேயில் கொல்கத்தா அணியை ரன்கள் அடிக்கவிடாமல் கட்டுப்படுத்தி 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தனர். வான்ஹடே மைதானத்தில் நடந்த டி20 போட்டியில் பவர்ப்ளேயில் சேர்க்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்.

ஆபத்தான மூவர்

வான்ஹடே மைதானத்தில் வழக்கமான பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளமாக இல்லாமல் சிறிது கடினமான ஆடுகளத்தில் ஆட்டம் நடந்ததால், அதை ராஜஸ்தான் வீரர்கள் நன்கு பயன்படுத்தினர்.
குறிப்பாக மோரிஸ் கொல்கத்தா அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களான ஆன்ட்ரூ ரஸல், தினேேஷ் கார்த்திக், கம்மின்ஸ் ஆகிய மூவரையும் வெளியேற்றினார். ஆபத்தான இந்த மூவரும் சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தையே மாற்றக்கூடியவர்களாக இருந்தனர்.

மிகக்குறைந்த ஸ்கோரை சேஸிங் செய்யும் விதத்திலும் ராஜ்ஸதான் அணி தொடகத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், கேப்டன் சாம்ஸன், மில்லர், துபே ஆகியோர் நல்லபாட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிக்கு நகர்த்தினர்.

குறிப்பாக கம்மின்ஸுக்கு ரியான் பராக் பவுண்டரி எல்லையில் கேட்ச் பிடித்ததும், திவேட்டியா, பராக் இருவரும் செல்பி எடுப்பதுபோல் போஸ் கொடுத்தது ரசிக்கவைத்தது.

தொடர்ந்து 2 தோல்விகளைச் சந்தித்த ராஜஸ்தான் அணிக்கு இந்த வெற்றி மேலும் ஊக்கத்தைத் தரும். டெல்லி அணிக்கு எதிரானஆட்டத்திலும் மேட்ச்வின்னராக திகழ்ந்த மோரிஸ், இந்த ஆட்டத்திலும் கொல்கத்தா பேட்டிங் வரிசையை வீழ்த்தும் மேட்ச் வின்னராக ஜொலித்துள்ளார்.

மனச்சோர்வு

கொல்கத்தா அணியைப் பொருத்தவரை “இன்டென்ட்” எனச் சொல்லப்படும் வெற்றிக்கான நோக்கம் இல்லாமல் மனரீதியாக சோர்ந்து போய்தான் நேற்று வீரர்கள் விளையாடினார் என்றே தோன்றுகிறது.
133 ரன்களை வைத்துக்கொண்டு எதிரணியை வென்றுவிடலாம் என்று நினைப்பது சாத்தியமில்லாதது. அதிலும் வான்ஹடே மைதானத்தில் இந்த ஸ்கோர் மூலம் வென்றுவிடால் என்று நினைப்பது முட்டாள்தனம்.

எந்த வீரர்களின் பேட்டிங்கிலும் உற்சாகமில்லை, ரன் சேர்க்க வேண்டும் என்ற தீராத வெறி இல்லாமல், ஏதோ டெஸ்ட் போட்டி விளையாடுவதுபோன்று விளையாடினர்.

56 டாட்பந்துகள்

இந்த ஆட்டத்தில் மட்டும் 56 டாட்பந்துகளை கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் சந்தித்துள்ளனர். டி20 போட்டியில் ஒரு அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமே டாட்பந்துகளை அதிகம் விடுவதுதான். இந்த டாட் பந்துகளை கொல்கத்தா அணி ரன்களாக மாற்றிஇருந்தாலே கூடுதலாக 56 ரன்கள் கிடைத்திருக்கும். எந்தவிதமான முழுமுயற்சியும் இன்று கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் விளையாடியது தெரிந்தது.

ஐபிஎல் தொடரில் 4-வது முறையாக கிறிஸ் மோரிஸ் பந்துவீச்சில் ரஸல் நேற்று ஆட்டமிழந்தார். ரஸலின் பலவீனம் தெரிந்தை ஸ்லோ பாலாக ஸ்லாட்டில் மோரிஸ் வீச அதை தூக்கி அடித்தார். ஆனால், லாங் ஆன் திசையில் மில்லரிடம் கேட்ச்சானது.

மோர்கனுக்கு என்னாச்சு

உலகளவில் சிறந்த கேப்டன் என்று புகழப்படும் இங்கிலாந்து அணியின் சிறந்த கேப்டன் என்று மோர்கன் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டு தனது பெயரைக் கெடுத்துக்கொண்டிருக்கிறார். சரியான வீரர்கள் அமையவில்லையா, அல்லது கேப்டன்ஷிப் மோசமா என்ற கேள்வி எழுகிறது. இதுவரை கேப்டன் மோர்கனிடம் இருந்து 5 போட்டிகளில் பேட்டிங்கில் எந்தவிதமான குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு ஏதுமில்லை.

கம்மின்ன்ஸ் கவலை

உலகளவில் சிறந்த பந்துவீச்சாளர், நம்பர் ஒன் பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸும் கொல்கத்தா அணிக்கு வந்து தனது நற்பெயரைக் கெடுத்துகொண்டுள்ளார். அவரை கொல்கத்தா அணியில் சரியாகப் பந்துவீச முடியவில்லையா, அல்லது ஆடுகளம் சரியில்லையா எனத் தெரிவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் கம்மின்ஸ் ரன்களை வாரி வழங்கி வருகிறார்.

ஒட்டுமொத்தத்தில் கொல்கத்தா அணி மனரீதியாக நம்பிக்கையை இழந்துவிட்டதும், பேட்ஸ்மேன்களின் மோசமான ஃபார்மும்தான் தோல்விக்குக் காரணமாகும்.

பொறுப்பான ஆட்டம்

134 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. பட்லர், ஜெய்ஸ்வால் ஆட்டத்தைத் தொடங்கினர். ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆட பட்லர் அமைதிகாத்தார். வருண் பந்துவீச்சில் ஒரு பவுண்டரிஅடித்த பட்லர் அடுத்த பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அடுத்த சிறிது நேரத்தில் ஜெய்ஸ்வால் 22 ரன்னில் மாவி பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். பவர்ப்ளே ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் சேர்த்தது ராஜஸ்தான்.

3-வது விக்கெட்டுக்கு துபே, சாம்ஸன் ஜோடி ஓரளவுக்கு நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். துபே 22 ரன்னில் வருண் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த திவேட்டியா 5ரன்னில் பிரசி்த் கிருஷ்ணாவிடம் வி்க்ெகட்டை இழந்தார். 4-வது விக்கெட்டுக்கு மில்லர், சாம்ஸன் ஜோடி ஆட்டத்தை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். சாம்ஸன் 42 ரன்களிலும், மில்லர் 24 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் சேர்த்து ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

விக்கெட் சரிவு

முன்னதாக கொல்கத்தா அணி முதலில் பேட்செய்தது. ராணா, கில் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். கடந்த 5 போட்டிகளாகவே பேட்டிங்கில் தடுமாறிவரும் கில்இந்த ஆட்டத்திலும் அதைத் தொடர்ந்தார். கில் 19 பந்துகளில் 11 ரன்கள் சேர்த்த நிலையில் பட்லரால் ரன்அவுட் செய்யப்பட்டார்.

அதன்பின் வந்த எந்த பேட்ஸ்மேன்களும் பார்ட்னர்ஷிப் அமைக்காமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துவந்தனர். கொலக்கத்தா அணியில் அதிகபட்சமே திரிபாதி சேர்த்த 36 ரன்கள்தான். கடைசி 6 விக்கெட்டுகள் 36 ரன்களுக்குள் கொல்கத்தா அணியினர் இழந்தநர். ராணா(22), நரேன்(6), மோர்கன்(0), கார்த்திக்(25), ரஸல்(9), கம்மின்ஸ்(10),மாவி(5) என சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.
ராஜஸ்தான் தரப்பில் மோரிஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x