Last Updated : 16 Oct, 2015 05:41 PM

 

Published : 16 Oct 2015 05:41 PM
Last Updated : 16 Oct 2015 05:41 PM

ஹெராத் பந்துவீச்சில் 251 ரன்களுக்குச் சுருண்ட மே.இ.தீவுகள் பாலோ ஆன்

கால்லே மைதானத்தில் நடைபெறும் இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று மே.இ.தீவுகள் அணி 251 ரன்களுக்குச் சுருண்டதால் பாலோ ஆன் விளையாட பணிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி தன் முதல் இன்னிங்ஸில் கருணரத்னே (186), தினேஷ் சண்டிமால் (151) ஆகியோரது அபார ஆட்டத்தினால் 484 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் 2-ம் நாளான நேற்று 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்திருந்தது, இன்று 251 ரன்களுக்குச் சுருண்டது. ஹெராத் 33 ஓவர்கள் வீசி 9 மெய்டன்களுடன் 68 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தம்மிக பிரசாத் 2 விக்கெட்டுகளையும், நுவான் பிரதீப், கவுஷல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர், 233 ரன்கள் பின் தங்கியுள்ள மே.இ.தீவுகள் தற்போது பாலோ ஆனில் 2 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் வரிசை பேட்ஸ்மென்களில் டேரன் பிராவோ மட்டுமே அதிகபட்சமாக 107 பந்துகளில் 8 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 50 ரன்கள் எடுத்தார். அதிகபட்ச பார்ட்னர்ஷிப் 8-வது விக்கெட்டுக்காக கிமார் ரோச், ஜெரோம் டெய்லர் இடையே 46 ரன்கள் சேர்க்கப்பட்டது.

2-ம் நாளில் மே.இ.தீவுகளின் தொடக்க ஆட்டக்காரர்களான பிராத்வெய்ட் (19), ஹோப் (23) ஆகியோரை வீழ்த்திய ஹெராத், சாமுயெல்ஸுக்கு ஒரு அருமையான பந்தை வீச நடுவர் நாட் அவுட் என்றார், அது 3-வது நடுவர் தீர்ப்புக்குச் சென்ற்து அவரும் நாட் அவுட் என்றார். இதனையடுத்து மேலேறி வந்து லாங் ஆஃபில் ஒரு பவுண்டரி அடித்த சாமுயெல்ஸ், கடைசி பந்தை புல் ஆட முயன்று பந்து தொடையில் பட்டு பவுல்டு ஆனார். இவர் 11 ரன்களில் வீழ்ந்தார்.

ரங்கனா ஹெராத் தனது பிளைட், லெந்த் மற்றும் கோணங்களினால் டேரன் பிராவோவுக்கு கடும் சிக்கல்களைத் தோற்றுவிக்க பிராவோ அமைதி காத்தார். ஆனால் ஹெராத்தை, மேத்யூஸ் பந்து வீச்சிலிருந்து அகற்ற, தாரிந்து கவுஷல் வீசிய 2 ஷார்ட் பிட்ச் பந்துகளை ஒரு பவுண்டரி, மற்றும் சிக்ஸ் அடித்து இறுக்கத்தை தளர்த்தினார் பிராவோ. கொஞ்சம் சுதந்திரமாக ஆடிய பிராவோ, பிறகு நுவான் பிரதீப்பை பாயிண்டில் 2 பவுண்டரிகள் அடித்தார்.

ஜெர்மைன் பிளாக்வுட், தம்மிக பிரசாத் பந்தை ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பிராவோ அரைசதம் எடுத்த பிறகு ஹெராத் மீண்டும் வந்தார், இம்முறை அவரையும் மேலேறி வந்து அடிக்க முயன்ற பிராவோ, சண்டிமாலின் அற்புதமான ஒரு கை கேட்சுக்கு 50 ரன்களில் வெளியேறினார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு ஜேசன் ஹோல்டரை வீழ்த்தினார் தம்மிக பிரசாத். தினேஷ் ராம்தின், நுவான் பிரதீப்பின் பந்தில் வெளியேறினார். அப்போது மே.இ.தீவுகள் 171/7 என்று பாலோ ஆன் அச்சுறுத்தலில் இருந்தது.

பிறகு கிமார் ரோச் 22 ரன்களையும் ஜெரோம் டெய்லர் 31 ரன்களையும், பிஷூ 23 ரன்களையும் எடுக்க 251 ரன்களை எட்டியது மேற்கிந்திய அணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x