Last Updated : 17 Nov, 2020 02:31 PM

 

Published : 17 Nov 2020 02:31 PM
Last Updated : 17 Nov 2020 02:31 PM

நல்ல விளம்பரம்: மும்பை இந்தியன்ஸ் அணியின் கிளவுஸ் அணிந்து பாகிஸ்தான் டி20 லீக்கில் விளையாடிய ரூதர்போர்ட்

மும்பை இந்தியன்ஸ் கிளவுஸ் அணிந்து கராச்சி கிங்ஸ் அணியில் விளையாடிய ரூதர்போர்ட் : படம் | ஏஎன்ஐ.

கராச்சி

பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த மே.இ.தீவுகள் வீரர் ஷெர்ஃபான் ரூதர்போர்ட், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடும்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கிளவுஸ் அணிந்து விளையாடியது பெரும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த மே.இ.தீவுகள் வீரர் ரூதர்போர்ட். இந்த ஐபிஎல் தொடரில் அவர் ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை என்றாலும், அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில்தான் இடம் பெற்றிருந்தார்.

இந்நிலையில் ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் துபாயிலிருந்தவாறே பாகிஸ்தானில் நடைபெறும் பாகிஸ்தான் டி20 ப்ரீமியர் லீக்கில் பங்கேற்க ரூதர்போர்ட் சென்றுவிட்டார்.

பாகிஸ்தான் டி20 லீக் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கி நடந்த நிலையில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக லீக் ஆட்டங்களுடன் நிறுத்தப்பட்டது. தற்போது ப்ளே ஆஃப் சுற்றுகள் நடந்து வருகின்றன. கராச்சி கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ரூதர்போர்ட் நேற்று முன்தினம் நடந்த முதலாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் களமிறங்கினார்.

ஆனால், ரூதர்போர்ட் விளையாடும்போது, கராச்சி கிங்ஸ் அணியின் கிளவுஸ் அணிந்து விளையாடாமல், மும்பை இந்தியன்ஸ் அணியின் கிளவுஸ் அணிந்து விளையாடினார். இதைத் தொலைக்காட்சியில் கண்ட ரசிகர்கள் கராச்சி கிங்ஸ் அணியைக் கிண்டல் செய்து ட்வீட் செய்யத் தொடங்கினர்.

ஒரு ரசிகர் ட்விட்டரில், “கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடும் ரூதர்போர்ட், மும்பை இந்தியன்ஸ் அணியின் கிளவுஸ் அணிந்து விளையாடுகிறார்” எனத் தெரிவித்தார்.

மற்றொருவர், ‘‘உங்களுக்குத் தெரியுமா, மும்பை இந்தியன்ஸ் கிளவுஸை அணிந்து ரூதர்போர்ட், கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடுகிறார்” எனத் தெரிவித்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கிளவுஸை அணிந்து ரூதர்போர்ட் பாகிஸ்தானின் கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடியது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

கடந்த வாரம் தூபாயிலிருந்து பாகிஸ்தானுக்கு டி20 லீக்கில் ரூதர்போர்டு விளையாடச் சென்றபோது, மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்போர்ட்ஸ் கிட்டை அணிந்து அங்கு சென்றதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாகிஸ்தான் ப்ரீமியர் லீ்க்கில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் லாகூர் குவாலண்டர்ஸ் அணியை எதிர்த்து மோதுகிறது கராச்சி கிங்ஸ் அணி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x