Last Updated : 05 Nov, 2020 03:12 AM

 

Published : 05 Nov 2020 03:12 AM
Last Updated : 05 Nov 2020 03:12 AM

விளையாட்டாய் சில கதைகள்: பிறந்தநாள் வாழ்த்துகள் கேப்டன்!

இந்திய கிரிக்கெட்டின் இப்போதைய பெருமையாக கருதப்படும் கோலியின் பிறந்த நாள் இன்று (நவம்பர் 5). உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக திகழும் கோலி, 86 டெஸ்ட் போட்டிகளில் 7,240 ரன்களையும், 248 ஒருநாள் போட்டிகளில் 11,867 ரன்களையும் குவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இவர் விளாசியுள்ள சதங்களின் எண்ணிக்கை மட்டும் 70. இந்த அளவுக்கு வேகமாக கோலி ரன்களைக் குவிப்பதற்கு காரணம் அவரது மன உறுதி. இதற்கு உதாரணமாக 2006-ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்லலாம்.

2006-ம் ஆண்டில் கோலி டெல்லி அணிக்காக ஆடிக்கொண்டு இருந்தார். இந்த நேரத்தில் கர்நாடகாவுக்கும் டெல்லிக்கும் இடையிலான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்தது. முதலில் ஆடிய கர்நாடகா 446 ரன்களைக் குவிக்க, அடுத்து ஆடிய டெல்லி அணி 105 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்திருந்தது.

விராட் கோலி 40 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். அடுத்த நாள் ஆட்டத்தில் கோலியையே அணி நம்பியிருந்தது. இந்தச் சூழலில் அன்றைய தினம் கோலியின் அப்பா பிரேம் கோலி காலமானார்.

அப்பா இறந்ததால் அடுத்த நாள் விராட் கோலி ஆடமாட்டார் என்றுதான் அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் அதற்கெல்லாம் மாறாக அடுத்த நாளே பேட்டும் கையுமாக மைதானத்தில் ஆஜரான கோலி, தந்தை இறந்த துக்கத்தையும் மறந்து 90 ரன்களைச் சேர்த்தார். டெல்லி அணி பாலோ ஆன் ஆகாமல் காத்தார். அந்த மன உறுதிதான் அவரை உலகின் நம்பர் ஒன் வீரராக்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x