Published : 12 Oct 2020 12:05 PM
Last Updated : 12 Oct 2020 12:05 PM

ராகுல் திவேத்தியாவுக்கு வாய்த்த அதிர்ஷ்டம்,  காப்பாற்றிய ‘பைல்’- வெற்றி பெற முடியாத நிலையிலிருந்து வெற்றி சாதித்த புதிய பினிஷர்

அன்று காட்ரெல் ஓவரில் 5 சிக்சர்களை விளாசி வெற்றி பெற முடியாத போட்டியை வெற்றி பெறச் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ‘புதிய பினிஷர்’ ராகுல் திவேத்தியா, நேற்றும் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக மீண்டும் வெற்றி பெற முடியாத நிலையிலிருந்து கடினமான பிட்சில் வெற்றி பெறச் செய்தார்.

இவரும் ரியான் பராகும் இணைந்து 78/5-லிருந்து ஆட்டமிழக்காமல் 19.5 ஓவர்களில் 163/5 என்று வெற்றி பெற்றனர். ரியான் பராக் 2 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 42 ரன்கள் எடுக்க, திவேத்தியா 28 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 45 ரன்கள் எடுதார்.

அதுவும் குறிப்பாக கடினமான பவுலர் ரஷீத் கானை அடுத்தடுத்து இரண்டு ரிவர்ஸ் ஸ்விப்புகள் ஆச்சரியத்தை கிளப்பின. 18வது ஓவரில் ரஷீத் கானை 3 பவுண்டரிகள் அடித்தார் திவேத்தியா. இது முற்றிலும் ஆட்டத்தை மாற்றிப்போட்டது.

மறுமுனையில் பராக் 18 வயதான மிக இளம் வீரர், இவருக்கு கேட்ச் விடப்பட்டது, 12 ரன்களில் இவர் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை.

ராயல்ஸ் அணி 105/5 என்று 16வது ஓவரில் இருந்தது. இங்கிருந்து வெற்றி சாத்தியமே இல்லை, திவேத்தியா மட்டுமே ஒரு நம்பிக்கையாக இருக்கிறார். சன் ரைசர்ஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை. அதனால் திவேத்தியாவின் ஆக்ரோஷ அடியிலும் பராகின் உறுதியிலும் இருவரும் 47 பந்துகளில் 85 ரன்களை விளாசினர். கடைசி 2 ஓவர்களில் 22 ரன்கள் தேவை என்ற நிலையில் திவேத்தியா, டி.நடராஜனின் தோல்வியடைந்த யார்க்கர்களை விளாசினார். ஒரு பவுண்டரி, ஒரு அபார்மான பைன் லெக் சிக்ஸ்.

இந்நிலையில்தான் ரஷீத் கான் ஓவரில் திவேத்தியாவின் அதிர்ஷ்டம் அவருக்கு கைகொடுத்தது. ரஷீத் கான் வீசிய பந்தை திவேத்தியா கட் செய்ய முயன்றார். பந்து விக்கெட் கீப்பர் பேர்ஸ்டொவின் பேடில் பட்டு ஸ்டம்பை அடிக்க பிரகாசித்த பைல் சற்றே நிலைகுலைந்தாலும் கீழே விழவில்லை. பந்து ஸ்டம்பை அடித்தது ஆனால் பைல் கீழே விழவில்லை. தப்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x