Published : 05 Jun 2020 18:24 pm

Updated : 05 Jun 2020 18:24 pm

 

Published : 05 Jun 2020 06:24 PM
Last Updated : 05 Jun 2020 06:24 PM

லாக்-டவுனிலும் கடுமையாகச் சம்பாதிக்கும் விராட் கோலி: இன்ஸ்டாகிராம் வருவாயில் 6ம் இடம் 

kohli-in-top-10-of-highest-earning-athletes-on-instagram-during-lockdown

ஸ்பான்சர் செய்யப்படும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்கள் மூலம் ஈட்டும் வருமானத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் 6ம் இடத்தில் இருக்கிறார்.

ஸ்பான்சர் செய்யப்படும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்கள் மூலம் விராட் கோலி 3,79,294 பவுண்டுகள் (சுமார் ரூ.3,63,36,737.36 ).

அதாவது ஒவ்வொரு பதிவுக்கும் 126,431 பவுண்டுகள் சம்பாதித்துள்ளார். இந்த 379,294 பவுண்டுகளை விராட் கோலி மார்ச் 12 முதல் மே 14 வரை சம்பாதித்துள்ளார்.

கோலியின் ஆதர்சமான போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ பட்டியலில் முதலிடம் பிடித்து 1.8 மில்லியன் பவுண்டுகள் ஸ்பான்சர்டு இன்ஸ்டாகிராம் போஸ்ட்கள் மூலம் சம்பாதித்துள்ளார்.

2வது மற்றும் 3வது இடத்தில் லியோனல் மெஸ்ஸி, பிரேசில் நட்சத்திரம் நெய்மர் உள்ளனர். மெஸ்ஸி 1.2 மில்லியன் பவுண்டுகளும் நெய்மர் 1.1 மில்லியன் பவுண்டுகளும் ஈட்டியுள்ளனர்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Kohli in top-10 of highest-earning athletes on Instagram during lockdownலாக்-டவுனிலும் கடுமையாகச் சம்பாதிக்கும் விராட் கோலி: இன்ஸ்டாகிராம் வருவாயில் 6ம் இடம்கிரிக்கெட்இந்தியாவிராட் கோலிஇன்ஸ்டாகிராம்லியோனல் மெஸ்ஸிகிறிஸ்டியானோ ரொனால்டோநெய்மர்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author