

ஸ்பான்சர் செய்யப்படும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்கள் மூலம் ஈட்டும் வருமானத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் 6ம் இடத்தில் இருக்கிறார்.
ஸ்பான்சர் செய்யப்படும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்கள் மூலம் விராட் கோலி 3,79,294 பவுண்டுகள் (சுமார் ரூ.3,63,36,737.36 ).
அதாவது ஒவ்வொரு பதிவுக்கும் 126,431 பவுண்டுகள் சம்பாதித்துள்ளார். இந்த 379,294 பவுண்டுகளை விராட் கோலி மார்ச் 12 முதல் மே 14 வரை சம்பாதித்துள்ளார்.
கோலியின் ஆதர்சமான போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ பட்டியலில் முதலிடம் பிடித்து 1.8 மில்லியன் பவுண்டுகள் ஸ்பான்சர்டு இன்ஸ்டாகிராம் போஸ்ட்கள் மூலம் சம்பாதித்துள்ளார்.
2வது மற்றும் 3வது இடத்தில் லியோனல் மெஸ்ஸி, பிரேசில் நட்சத்திரம் நெய்மர் உள்ளனர். மெஸ்ஸி 1.2 மில்லியன் பவுண்டுகளும் நெய்மர் 1.1 மில்லியன் பவுண்டுகளும் ஈட்டியுள்ளனர்.