Published : 02 Mar 2020 10:52 AM
Last Updated : 02 Mar 2020 10:52 AM

சாக்குபோக்குகள் கூறவில்லை..., டாஸ்...ஏமாற்றம்... அது இது... : இரட்டை ஒயிட்வாஷ் தோல்விக்குப் பிறகு விராட் கோலி

நியூஸிலாந்து தொடரில் ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் இரட்டை ஒயிட்வாஷ் தோல்வியடைந்ததையடுத்து விராட் கோலி ஆட்டம் முடிந்த பிறகு ஏமாற்றம் தெரிவித்தார்.

நியூஸிலாந்து அணி இரண்டரை நாட்களில் நம்பர் 1 அணியை மூட்டைக் கட்டி அனுப்பியது. இனி ஜாம்பவான்கள் எல்லாம் கிரீன் டாப் பிட்ச் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடத்தான் வேண்டும், இல்லையேல் இத்தகைய பிட்ச்களில் ஆடி திறமையை நிரூபிக்கும் இளைஞர்களுக்கு வழி விட வேண்டும், அதிக நாட்களுக்கு தோல்விக்குப் பிறகு சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்பதை இந்திய வீரர்கள் உணர வேண்டும்.

கிறைஸ்ட் சர்ச் டெஸ்ட்டில் பவுலர்கள் 242 ரன்களை வைத்துக் கொண்டு 7 ரன்கள் முன்னிலை பெற வைத்தனர், ஆனால் இந்திய பேட்டிங் வெறும் நடனமாகவே அமைந்தது, குறிப்பாக ரஹானே, விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோர் ஒரு பங்களிப்பையும் செய்யவில்லை.

இந்நிலையில் விராட் கோலி தெரிவிக்கும் போது,

“முதல் டெஸ்ட் போட்டியில் தீவிரமில்லை, ஆனால் இந்தப் போட்டியில் தீவிரம் இருந்தது ஆனால் வெற்றியாக மாற்ற முடியவில்லை. ரொம்ப நேரம் சரியான இடங்களில் வீசாமல் பந்து வீசினோம். நியூஸிலாந்து அணியினர் நிறைய நெருக்கடி கொடுத்தனர்.

நியூஸிலாந்து அணி திட்டமிட்டு விளையாடியது, நாங்கள் எங்கள் திட்டங்களை சரியாகச் செயல் படுத்தாதது ஆகிய இரண்டின் கலவையாக இந்த தோல்வி அமைந்தது. பவுலர்கள் ஆக்ரோஷமாக வீசுவதற்கு பேட்ஸ்மென்கள் ஒன்றும் செய்யவில்லை.

பெரிய ஏமாற்றமாக உள்ளது, சரிசெய்ய வேண்டியவற்றை சரி செய்வது அவசியம். டாஸ் ஒரு காரணிதான், ஆனால் புகார் கூறவில்லை. 2 டெஸ்ட் போட்டிகளிலும் டாஸ் பவுலர்களுக்குக் கூடுதல் சாதகமாக அமைந்தது, ஆனால் சர்வதேச கிரிக்கெட்டி இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தோலிக்கான சாக்குப்போக்குகள் எதுவும் இல்லை. எதிர்காலத்தை நோக்கி நகர்வோம், டெஸ்ட்களில் நாங்கள் விரும்பிய கிரிக்கெட் ஆட்டத்தை ஆட முடியவில்லை.” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x