Published : 24 Feb 2020 10:04 AM
Last Updated : 24 Feb 2020 10:04 AM

ஹங்கேரி ஓபன் டேபிள் டென்னிஸ்: சரத் கமல் -சத்யன் ஜோடிக்கு வெள்ளி பதக்கம்

ஹங்கேரியில் நடைபெற்று வரும் ஐடிடிஎப் உலக டூர் ஹங்கேரியன் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அசந்தா சரத் கமல்- ஞானசேகரன் சத்யன்ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது.

ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் இப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியில் சரத் கமல்-சத்யன் ஜோடியும், ஜெர்மனியின் பெனடிக்ட்-பாட்ரிக் பிரான்சிஸ்கா ஜோடியும் மோதின. இதில் 5-11, 9-11, 11-8, 9-11 என்ற புள்ளிகள் கணக்கில் சரத் கமல்-சத்யன் ஜோடி தோல்வி கண்டது.

இதையடுத்து இந்திய ஜோடிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

இந்தப் போட்டியில் சரத் கமல் வெல்லும் 2-வது பதக்கமாகும் இது. ஏற்கெனவே கலப்பு இரட்டையர் பிரிவில் அமர் மணிகா பத்ராவுடன் இணைந்து வெண்கலம் வென்றிருந்தார்.

ஸ்வீடன்: ஸ்வீடன் நாட்டில் நடைபெற்ற ஸ்வீடிஷ் ஜூனியர் மர்றும் கேடட் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியின் மினி கேடட் பெண்கள் பிரிவில் சென்னை வீராங்கனை மதன் ராஜன் ஹன்சினி வெண்கலம் வென்றார்.

நேற்று நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் மதன் ராஜன் ஹன்சினி 12-10, 9-11, 5-11, 8-11 என்ற புள்ளிகள் கணக்கில் ரஷ்யாவின் லுல்லியா புகோவ்கினாவிடம் தோல்வி கண்டார். இதையடுத்து அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x