Published : 08 Feb 2020 11:58 AM
Last Updated : 08 Feb 2020 11:58 AM

கப்தில், நிகோல்ஸ் அடித்தளத்துக்குப் பிறகு சரிவு.. மீண்டும் ராஸ் டெய்லரின் அபார ஆட்டத்தினால் நியூஸிலாந்து 273 ரன்கள்

ஆக்லாந்து ஒருநாள் போட்டியில் தொடரை வெல்லும் முனைப்புடன் ஆடி வரும் நியூஸிலாந்து அணி இந்திய கேப்டன் விராட் கோலியால் முதலில் பேட் செய்ய அனுப்பப்பட்டனர், நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புகு 273 ரன்கள் எடுத்துள்ளது.

42வது ஓவரில் 197/8 என்று நியூஸிலாந்து மலிவாக வீழ்ந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ராஸ் டெய்லர் (73), அறிமுக ஆல்ரவுண்டர் கைல் ஜேமிசன் (25) இணைந்து 51 பந்துகளில் 76 ரன்களை ஆட்டமிழக்காமல் சேர்க்க நியூஸிலாந்து அணி பேட்டிங்குக்கு கடினமான பிட்சில் 273 ரன்களைச் சேர்த்தது. ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சு மீண்டும் சோபிக்காமல் 10 ஓவர்களில் அவர் 64 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

கப்தில் (79), நிகோல்ஸ் (41) இணைந்து 16.5 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்காக 93 ரன்களைச் சேர்த்தனர். அதன் பிறகு 142/1 என்ற நிலையிலிருந்து அடுத்த 55 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை நியூஸிலாந்து பறிகொடுத்தது.

இதற்கு ஷர்துல் தாக்கூரின் அபார பீல்டிங்கினால் ஒரு ரன் அவுட்டும், ஜடேஜா மிகப்பிரமாதமாக ஒருகையில் நேராக ஸ்டம்பை அடித்து நீஷமை ரன் அவுட் செய்ததும் காரணமாகும். இதுதவிர சாஹல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஜடேஜா அதி முக்கிய விக்கெட்டான டாம் லேதமை எல்.பி. செய்ய நியூஸிலாந்து வீழ்ச்சியின் விளிம்பில் இருந்தது.

ராஸ் டெய்லர் நியூஸிலாந்து அணி 8வது விக்கெட்டை 197 ரன்களில் இழக்கும் போது 47 பந்துகளில் 29 ரன்கள் என்று இருந்தவர் கடைசியில் 74 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 73 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

மார்டின் கப்தில் தொடக்கத்தில் அபாரமான சில ஷாட்களை ஆடினார். பும்ரா 10 ஓவர்களில் 64 ரன்களை விட்டுக் கொடுத்ததில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களை விட்டுக் கொடுத்தார், இதில் 25 டாட் பால்கள் என்றால் 60 பந்துகளில் 25 பந்துகள் ரன் இல்லை, மீதி 35 பந்துகளில் 64 ரன்கள் என்பது கிட்டத்தட்ட பந்துக்கு 2 ரன்கள் பக்கம் கொடுத்துள்ளார், அதாவது ஸ்மார்ட் சிக்கனவிகிதத்தின் படி பார்த்தால், 25 டாட்பால்களை வீசியவர் 35 பந்துகளில் 64 ரன்களை விட்டுக் கொடுத்திருக்கக் கூடாது.

இவரைவிடவும் ஷர்துல் தாக்குர் இன்று நன்றாக வீசினார், முதல் போட்டியை ஒப்பிடும் போது தாக்குர் முதல் ஸ்பெல்லை நன்றாகவே வீசினார் ஆனால் கடைசியில் அவரும் 10 ஓவர் 1 மெய்டன் 60 ரன்கள் 2 விக்கெட் என்று ஆனார். 60 பந்துகளில் 34 டாட்பால்களை வீசியவர் 26 பந்துகளில் 60 ரன்கள் என்பது 200%ஐயும் தாண்டிய ஸ்ட்ரைக் விகிதமாகும். இதுவும் மோசமான திட்டமிடல் இல்லாத பந்து வீச்சே.

நவ்தீப் சைனி தன் வேகத்தினால் மிரட்டினார் மணிக்கு 144-145 கிமீ வேகத்தில் வீசி அவர் 10 ஒவர் 48 ரன்களையே கொடுத்தாலும் ஸ்மார்ட் விகிதத்தின் படி 36 டாட்பால்களை நீக்கி விட்டு பார்த்தால் 24 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 48 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார்.

சாஹல் 55 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினாலும் பிக் ஆஃப் த பவுலர் என்று பார்த்தால் ஜடேஜாதான் 10 ஓவர் 35 ரன் 1 விக்கெட். 34 டாட்பால்களை கழித்து விட்டால் 26 பந்துகளில் 35 ரன்களையே விட்டுக் கொடுத்துள்ளார், இதுதான் பார்முலா. இப்படி அனைவரும் வீசியிருந்தால் நியூஸிலாந்து அணி 200-220 ரன்கள்தான்.

இந்திய அணி இலக்கை விரட்டி வருகிறது, பிரிதிவி ஷா, முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகள் விளாசி ஆடி வருகிறார்.

தவறவிடாதீர்!

பிப்.8-ம் தேதி, 8-வது ஓவர்... : மறக்க முடியுமா லெஜண்ட் கபில்தேவ் உலக சாதனை நாளை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x