Last Updated : 03 Feb, 2020 07:55 PM

 

Published : 03 Feb 2020 07:55 PM
Last Updated : 03 Feb 2020 07:55 PM

என் உடம்பில் கொழுப்பு எங்கு இருக்கிறது? : ஆடையைக் களைந்து நின்ற உமர் அக்மல் கேள்வி- தடை செய்யப்படுகிறார்?

உடற்தகுதி சோதனையின் போது உடலில் கொழுப்பு அதிகமாக உள்ளது என்று உடற்தகுதி பயிற்றுநர் கூற, அதற்கு தன் உடலில் இருந்த ஆடைகளைக் களைந்து ‘எங்கு இருக்கிறது கொழுப்பு?, கூறுங்கள்’ என்று உமர் அக்மல் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தயாராகி வருகிறது.

உடற்தகுதிச் சோதனையில் தோல்வியடைந்த உமர் அக்மல், கோபமடைந்து என் உடலில் எங்கு கொழுப்பு இருக்கிறது என்று கூறுங்கள் என்று ஆடைகளைக் களைந்து நின்ற உமர் அக்மலுக்குக் கடும் தண்டனை கிடைக்குமென்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

அதாவது அடுத்த உள்நாட்டுத் தொடருக்கு உமர் அக்மல் முழுதும் தடை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அகாடமியில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கம்ரன் அக்மல், உமர் அக்மல் சகோதரர்களுக்கு உடற்தகுதி எப்போதும் ஒரு பிரச்சினையாகவே இருந்து வந்தது, மிக்கி ஆர்தர் பயிற்சியாளராக இருந்த போது அக்மல் சகொதரர்களை அவர் நீக்கினார்.

இந்நிலையில் தொடர்ந்து உடற்தகுதியைக் காரணம் காட்டி தன்னை நிராகரிப்பதில் கோபமடைந்த உமர் அக்மல், பயிற்றுநர் முன்னிலையில் ஆடையைக் களைந்து ‘என் உடலில் எங்கு கொழுப்பு உள்ளது, கூறுங்கள்’ என்று கேட்டது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

2009-ல் நியூசிலாந்துக்கு எதிராக அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் கண்ட உமர் அக்மல், 16 டெஸ்ட் போட்டிகளில் 1003 ரன்களை எடுத்துள்ளார். 121 ஒருநாள் போட்டிகளில் 2 சதங்களுடன் 3,194 ரன்களை எடுத்துள்ளார், அதிகபட்ச ஸ்கோர் 102 நாட் அவுட்.

84 டி20 சர்வதேசப்போட்டிகளில் உமர் அக்மல் 1690 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 94, 8 அரைசதங்களை எடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x