Published : 06 Aug 2015 07:53 PM
Last Updated : 06 Aug 2015 07:53 PM

அஜிங்கிய ரஹானே சதத்தினால் மீண்டது இந்திய அணி

இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் அணிக்கு எதிரான 3 நாள் பயிற்சி ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்துள்ளது.

அஜிங்கிய ரஹானே 109 ரன்களுடனும் ரவிச்சந்திரன் அஸ்வின் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இருவரும் இணைந்து 7-வது விக்கெட்டுக்காக இதுவரை 41 ரன்களைச் சேர்த்துள்ளனர்.

முன்னதாக 108/0 என்ற நிலையிலிருந்து 133/4 என்று சரிந்த இந்திய அணியை ரஹானே, புஜாரா (42) பார்ட்னர்ஷிப் தூக்கி நிறுத்தியது. இருவரும் இணைந்து 5வது விக்கெட்டுக்காக 134 ரன்கள் சேர்த்தனர். இதில் பெரும்பங்களித்தவர் ரஹானேதான்.

59 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் அரைசதம் கடந்த ரஹானே, 116 பந்துகளில் 10 பவுண்டரிகள் 1 சிக்சருடன் சதம் அடித்தார். புஜாரா 89 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்து வாண்டர்சே பந்தில் அவுட் ஆனார்.

விருத்திமான் சஹா 3 ரன்களில் வாண்டர்சேயிடம் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி பிரதானமாக நம்பியிருக்கும் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சோபிக்காமல் ஏமாற்றமளித்திருப்பது கவலைக்குரியதாகும்.

79 ஓவர்களில் இந்தியா 314 ரன்களை எடுத்தது பெரும்பாலும் ரஹானேயின் விரைவு ரன் குவிப்பினால் மட்டுமே சாத்தியமாகியுள்ளது என்று கூறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x