Published : 02 Jan 2020 05:53 PM
Last Updated : 02 Jan 2020 05:53 PM

யு-19 உலகக்கோப்பை கிரிக்கெட் ஹீரோ, ஷிகர் தவண் மாற்று வீரருக்கு ஓராண்டுத் தடை: மோசடியில் ஈடுபட்டதால் அதிரடி

அண்டர்-19 உலகக்கோப்பை ஹீரோவான மஞ்சோத் கல்ரா என்ற கிரிக்கெட் வீரர் தன் வயது குறித்து தவறான தகவல்களை அளித்து மோசடியில் ஈடுபட்டதாக ஓராண்டுக்கு ரஞ்சி உள்ளிட்ட உள்நாட்டு போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவர் ஷிகர் தவணுக்கு மாற்று வீரராக டெல்லி ரஞ்சி அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இளம் இடது கை தொடக்க ஆட்டக்காரரான மஞ்சோத் கல்ரா கடந்த யு-19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் சதம் அடித்தார். இவர் தனது யு-16, யு-19 நாட்களில் வயதில் மோசடி செய்ததால் டெல்லி கிரிக்கெட் சங்க நடுநிலையாளரால் ஓராண்டுக்குத் தடை செய்யப்பட்டார்.

ஆனால் இதே காரணத்துக்காக ஜூனியர் மட்டத்தில் டெல்லி அணியின் தற்போதைய மூத்த வீரர் நிதிஷ் ராணா தண்டிக்கப்படவில்லை, இவரிடம் மேலும் சில ஆவணங்களை நிரூபணமாகக் கேட்டுள்ளனர்.

இந்நிலையில் பணியிலிருந்து விலகவிருக்கும் ஓய்வு பெற்ற நீதிபதியும் டெல்லி கிரிக்கெட் சங்க நடுநிலையாளருமான பாதர் துரெஸ் அகமெட் தடை உத்தரவை விதித்தார். இதில் வயது வரம்பு கிரிக்கெட்டில் 2 ஆண்டுகளுக்கு கல்ரா ஆடக்கூடாது, மிக முக்கியமாக ரஞ்சி போட்டியிலிருந்து ஓராண்டுக்குத் தடை செய்யப்பட்டுள்ளார்.

பிசிசிஐ ஆவணங்களின்படி மஞ்சோத் கல்ராவின் வயது 20 ஆண்டுகள் 351 நாட்கள். இவர் கடந்த வாரம் டெல்லி-பெங்கால் யு-23 போட்டியில் ஆடி 80 ரன்கள் அடித்தார். இந்நிலையில் ரஞ்சி கிரிக்கெட்டில் ஷிகர் தவணுக்குப் பதிலாக ரஞ்சி அணியில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு இந்த அடி விழுந்துள்ளது.

ஆனால் பெரிய கேள்வி என்னவெனில் வயது தொடர்பான மோசடிக்காக அவரை எப்படி டெல்லி மூத்த வீரர்கள் அணியில் ஆடக்கூடாது என்று தடை விதிக்க முடியும் என்பதாகவே உள்ளது.

புதிய நடுநிலையாளர் பதவியேற்றவுடன் நிச்சயம் மஞ்சோத் கல்ராவின் பெற்றோர் மேல் முறையீடு செய்வார்கள் என டெல்லி கிரிக்கெட் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x