Published : 20 Nov 2019 12:33 PM
Last Updated : 20 Nov 2019 12:33 PM

ஓய்வும் இல்லை ஒன்றும் இல்லை: இன்னும் 2 ஆண்டுகள் விளையாடத் தெம்பு இருக்கிறது: லஷித் மலிங்கா அதிரடி

ஆஸ்திரேலியாவில் 2020-ல் நடைபெறும் ஐசிசி டி20 உலகக்கோப்பையில் இலங்கை அணியின் கேப்டன்சியில் கவனம் செலுத்திவரும் லஷித் மலிங்கா தன் உடலில் இன்னும் 2 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடும் தெம்பு உள்ளது என்று ஓய்வு பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவேன் என்று மலிங்கா கூறியுள்ள நிலையில் தற்போது இவர் பல்ட்டி அடித்திருப்பது இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு வரமா சாபமா என்பது தெரியவில்லை, மலிங்காவுக்கு இப்போது வயது 36 ஆகிறது, ஆனாலும் பவுலிங்கில் இன்னமும் தான் ஒரு பெரிய சக்திதான் என்பதை நிரூபித்து வருகிறார், யார்க்கர்களில் இன்னமும் கூட துல்லியம் கூடியுள்ளது என்பது வேறு விஷயம்.

சமீபத்தில் கூட நியூஸிலாந்துக்கு எதிராக 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார், எனவே மலிங்காவுக்கு மாற்று பவுலர் கிடைப்பதெல்லாம் அரிது, எனவே அவர் ஆடும் வரை ஆடட்டும் என்று இலங்கை விட்டு விடுவதுதான் நல்லது.

“ஏகப்பட்ட டி20 போட்டிகளில் ஆடியுள்ளதால் கேப்டனாகவும் வீரராகவும் டி20 கிரிக்கெட்டில் என்னால் தொடர முடியும். 4 ஓவர்கள் தானே வீசப்போகிறோம், ஆகவே இன்னும் 2 ஆண்டுகள் ஆடக்கூடிய உடல் தெம்பு உள்ளது” என்று மலிங்கா தனியார் இணையதளத்தில் கூறியுள்ளார்.

டி20யில் முதன் முதலில் 100 விக்கெட்டுகளைச் சாதித்தவர், அதுவும் டெஸ்ட், ஒருநாள், டி20 மூன்றிலும் 100 விக்கெட் எடுத்த முதல் வீரர்.

“என்னால் இலங்கை இளம் வீரர்களுக்கு ஏதாவது அளிக்க முடியும் என்றால் நான் அணியில் இருப்பதுதான் முறை. நான் விளையாடும் போதுதான் அவர்களுக்கு வழிகாட்ட முடியும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x