Published : 14 Oct 2019 04:05 PM
Last Updated : 14 Oct 2019 04:05 PM
துபாய்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்ட டெஸ்ட் தரவரிசையில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தின் முதலிடத்தை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நெருங்கிவிட்டார்.
அடுத்ததாக ராஞ்சியில் வரும் 19-ம் தேதி நடக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முடிவில் ஸ்மித்திடம் இருந்து முதலிடத்தை கோலி பறிப்பார் என்று நம்பலாம்.
பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலிஸ் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் 937 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி 936 புள்ளிகளுடன் 2-வதுஇடத்தில் உள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் கோலி இரட்டை சதம் அடித்ததன் காரணமாக 37 புள்ளிகள் பெற்று இந்த உயர்வை அடைந்துள்ளார்.
இந்திய அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 2-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் இடம் பெற்று 17-வது இடத்தை அடைந்துள்ளார். சத்தேஸ்வர் புஜாரா 4-வது இடத்திலும், ரஹானே 9-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.
பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை அஸ்வின் 3 இடங்கள் உயர்ந்து 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளர். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் தரவரிசையில் உயர்வைப் பெற்றார். தற்போது வரை டெஸ்ட் தொடரில் இதுவரை அஸ்வின் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னணியில் இருக்கிறார்.
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தொடரந்து 3-வது இடத்தில் நீடிக்கிறார். ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ரவிந்திர ஜடேஜா 2-வது இடத்திலும், அஸ்வின் 5-வது இடத்திலும் உள்ளனர்.
, பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT