Published : 12 Oct 2019 06:33 PM
Last Updated : 12 Oct 2019 06:33 PM
இந்திய கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே தென்னிந்திய நடிகை அஷ்ரிதா ஷெட்டியைத் திருமணம் செய்ய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விராட் கோலி, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் வரிசையில் இந்திய கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே நடிகை ஒருவரைத் திருமணம் செய்ய இருக்கிறார்.
தென்னிந்திய நடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணிஷ் பாண்டே திருமணம் செய்ய உள்ளதாவும், இவர்களது திருமணம் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளதாகவும் இந்தத் திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய நடிகையான அஷ்ரிதா ஷெட்டி 'உதயம் NH4', 'ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்', 'இந்திரஜித்' உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.
எனினும் இந்தத் திருமணம் குறித்த அதிகாரபூர்வ தகவல் மணிஷ் பாண்டே தரப்பிலிருந்து இதுவரை வெளியாகவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT