Published : 08 Oct 2019 07:35 PM
Last Updated : 08 Oct 2019 07:35 PM

ஜாகீர் கானை மட்டம்தட்டி ‘சுய தம்பட்டம்’ அடித்துக் கொண்ட ஹர்திக் பாண்டியா: நெட்டிசன்கள் கடும் பாய்ச்சல்

திங்களன்று இந்திய வேகப்பந்து வீச்சு லெஜண்ட் ஜாகிர் கான் தனது 41வது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். அவருகு பலதரப்புகளிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வந்த நிலையில் ஹர்திக் பாண்டியா, ஜாகீர் கானை வாழ்த்துகிறேன் பேர்வழி என்று கொஞ்சம் கூட ‘முதிர்ச்சியின்றி’ ஒரு வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்களின் சாபத்திற்கு ஆளாகியுள்ளார்.

ஜாகீர் கான் சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவங்களிலும் 600 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் அவரை மதிக்காமல் இப்படியா ட்வீட் போடுவது என்று ஹர்திக் பாண்டியாவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்துள்ளனர்.

அப்படி என்னதான் ஹர்திக் பாண்டியா செய்து விட்டார் என்கிறீர்களா? ‘ஹேப்பி பர்த் டே ஜாக், நான் இங்கு (வீடியோவில்) மைதானத்துக்கு வெளியே அடிப்பது போல் நீங்களும் அடிப்பீர்கள் என்று நம்புகிறேன்’ என்று ட்வீட் போட்டு, அதில் ஜாகீர் கான் வீசிய பந்து ஒன்றை தான் சிக்ஸ் அடித்த வீடியோவை வெளியிட்டு பதிவு மேற்கொண்டார்.

யாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறுகிறோமோ, அவர் பந்தை தான் சிக்ஸ் அடிக்கும் வீடியோவை வெளியிடுவது என்ன ஒரு மட்டமான ரசனை என்று நெட்டிசன்கள் பாண்டியாவைப்பிடித்து வாங்கிவிட்டனர்வாங்கி.

இது நெட்டிசன்கள் மத்தியில் அவ்வளவாக எடுபடவில்லை, கடும் விமர்சனங்களையும் வசைகளையும் கேலிகளையும் பாண்டியா எதிர்கொண்டு வருகிறார்.

நெட்டிசன்களில் சிலர் ‘இது மரியாதைக் கெட்டத்தனம்’ என்ற தொனியில் பாண்டியாவை சாட, மற்றும் சிலர் ஜாகீர் கானை புகழ்ந்து ஹர்திக் பாண்டியாவை இகழ்ந்து பேசியுள்ளனர்.

“பணமும் புகழும் ஒரு மனிதனின் தரத்தை உத்தரவாதம் செய்வதில்லை என்பதற்கு பாண்டியா ஓர் சிறந்த உதாரணம்”

“கடவுள் உங்களுக்கு (பாண்டியாவுக்கு) அனைத்தையும் கொடுத்துள்ளார் ஆனால் தரத்தை வழங்கவில்லையே”

“இத்தகைய முதிர்ச்சியின்மையில் நீயெல்லாம் எப்படி இந்திய அணியில் இருக்கிறாய்? இந்தமாதிரியான நடத்தையினால் நீ நன்றாக ஆடினாலும் ஒருபோதும் உன்னை ரசிகர்களுக்குப் பிடிக்கப் போவதில்லை”

“உனக்குத் தேவை எலும்பு முறிவு அறுவை சிகிச்சை அல்ல, மூளை அறுவை சிகிச்சை”

“இதை ஒரு சாதாரணத்துக்கும் கீழான ஆல்ரவுண்டர் கூறலாமா? உங்கள் கோணங்கி சேஷ்டைகளை மைதானத்துக்கு வெளியே காட்டி வருகிறீர்கள். ஆனால் 600 விக்கெட்டுகளை எடுத்த சாம்பியன் பவுலரிடம் காட்டாதீர்கள்”

மேற்கண்ட வகையில் பாண்டியாவுக்கு எதிராக நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x