Published : 06 Aug 2019 09:44 AM
Last Updated : 06 Aug 2019 09:44 AM

மேற்கிந்தியத் தீவுகளுடன் கடைசி டி 20-ல் இன்று மோதல்: ஒயிட்வாஷ் முனைப்பில் இந்திய அணி

கயானா 

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கடைசி டி 20 ஆட்டத்தில் இந்திய அணி இன்று மோதுகிறது.

இரு அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் அமெரிக்காவின் லாடர் ஹில் பகுதியில் நடைபெற்ற முதல் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் 96 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி சற்று தடுமாறியே வெற்றி கண்டது. அதே வேளையில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இந் திய அணி உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தியது.

இந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மா விளாசிய 67 ரன்கள் உதவியுடன் இந்திய அணி 168 ரன்களை இலக் காக கொடுத்தது. இலக்கை துரத் திய மேற்கிந்தியத் தீவுகள் அணி யானது 15.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 98 ரன் கள் எடுத்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டத்தை மேற்கொண்டு நடத்த முடியாத நிலை உருவானது.

இதனால் டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்பட்டு இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது. இந்த இரு வெற்றிகளால் தொடரை 2-0 என கைப்பற்றிய இந்திய அணி கடைசி மற்றும் 3-வது ஆட்டத்தில் இன்று களமிறங் குகிறது. இந்த ஆட்டம் மேற்கிந் தியத் தீவுகளில் உள்ள கயானாவில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத் திலும் வெற்றி பெற்று தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றுவதில் இந்திய அணி தீவிர முனைப்பு காட்டக்கூடும்.

தொடரை வென்றுவிட்டதால் ஏற்கெனவே பரிட்சார்த்த முறை களை மேற்கொள்ளும் விதமாக இரு ஆட்டங்களிலும் வெளியே அமரவைக்கப்பட்டிருந்த சில வீரர் களுக்கு இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி நிர்வாகம் வாய்ப்பு வழங்கக்கூடும். இந்த வகையில் தொடக்க வீரர்களில் ரோஹித் சர்மா அல்லது ஷிகர் தவணுக்கு ஓய்வு வழங்கிவிட்டு அந்த இடத்தில் கே.எல்.ராகுல் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இது ஒருபுறம் இருக்க ரிஷப் பந்த் கடந்த இரு ஆட்டத்திலும் பேட்டிங்கில் சிறப்பாக செயல் பட தவறினார். முதல் ஆட்டத்தில் 4 ரன்கள் எடுத்த அவர், 2-வது ஆட் டத்தில் ரன் கணக்கை தொடங்கும் முன்பே ஆட்டமிழந்தார். தோனி அணியில் இல்லாத நிலையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக முன்னிலைப் படுத்தப்பட்டு வரும் அவர், சிறந்த திறனை வெளிப் படுத்த வேண்டிய கட்டாயத் துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

பந்து வீச்சில் சகோதரர்களான தீபக் சாஹர், ராகுல் சாஹர் ஆகி யோர் இன்றைய ஆட்டத்தில் அறி முக வீரர்களாக களமிறங்க வாய்ப் புள்ளது. இவர்கள் களமிறங்கும் பட்சத்தில் நவ்தீப் சைனி, கலீல் அகமது, ரவீந்திர ஜடேஜா ஆகி யோரில் இருவர் வெளியே அமரவைக்கப்படக்கூடும்.

தொடரை நடத்தும் மேற்கிந் தியத் தீவுகள் அணியானது ஒருங் கிணைந்த செயல் திறனை வெளிப் படுத்துவது சவாலாக உள்ளது. டி 20 ஆட்டங்களில் வலுவான செயல் திறனை வெளிப்படுத்தும் அந்த அணி வீரர்கள் இம்முறை எதிர் பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறி னர். கெய்ரன் பொலார்டு, கேப்டன் கார்லோஸ் பிராத் வெயிட், எவின் லீவிஸ், நிக்கோலஸ் பூரன், ஷிம்ரன் ஹெட்மையர் உள்ளிட்டோர் மட்டையை சுழற்றினால் மட்டுமே வெற்றி சாத்தியமாகும்.

இன்றைய ஆட்டத்தில் மேற் கிந்தியத் தீவுகள் அணி ஆறுதல் வெற்றியை பெறும் பட்சத்தில், அது அடுத்து நடைபெற உள்ள ஒருநாள் போட்டி, டெஸ்ட் தொடர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும்.

நேரம்: இரவு 8

இடம்: கயானா

நேரலை: சோனி டென் 1

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x