Last Updated : 29 Jul, 2015 10:00 AM

 

Published : 29 Jul 2015 10:00 AM
Last Updated : 29 Jul 2015 10:00 AM

இந்தியா-ஆஸி. ஏ அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்: விராட் கோலி விளையாடுகிறார்

இந்தியா-ஆஸ்திரேலியா ஏ அணிகள் இடையிலான அதிகாரப்பூர்வமற்ற 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது. இதில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி களமிறங்குகிறார்.

முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், இன்று தொடங்கும் 2-வது போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது இந்திய அணி. அடுத்த மாதம் 12- ம் தேதி இலங்கையில் தொடங்கவுள்ள 3 போட்டிகள் கொண்ட் டெஸ்ட் தொடருக்கு பயிற்சி பெறும் வகையில் இந்த டெஸ்ட் போட்டி யில் களமிறங்குகிறார் கோலி. சென்னையிலும், கொழும்பிலும் ஏறக்குறைய ஒரே மாதிரியான காலநிலையே நிலவும் என்பதா லேயே இந்தப் போட்டியில் விளை யாட கோலி முடிவு செய்துள்ளார்.

ராகுலுக்கு ஓய்வு

இந்திய அணியைப் பொறுத்த வரையில் கடந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 96 ரன்கள் எடுத்த கே.எல்.ராகுலுக்கு இந்தப் போட்டியில் ஓய்வளிக்கப் பட்டுள்ளது. அபினவ் முகுந்த், புஜாரா, ஸ்ரேயாஸ் ஐயர், சங்கர் என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது இந்திய அணி. இப்போது கோலியும் இடம்பெற்றிருப்பதால் இந்திய அணியின் பேட்டிங் பலம் மேலும் அதிகரித்துள்ளது.

வேகப்பந்துவீச்சைப் பொறுத்த வரையில் உமேஷ் யாதவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவ ருக்குப் பதிலாக வருண் ஆரோன் களமிறங்குகிறார். கடந்தப் போட்டி யில் உடல்நலக்குறைவு காரணமாக வருண் ஆரோன் ஆடவில்லை. 2-வது போட்டியில் வருண் ஆரோனும், அபிமன்யூ மிதுனும் இந்தியாவின் வேகப்பந்து வீச்சை கவனிக்கவுள்ளனர்.

இதேபோல் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ராவுக்கும் ஓய்வளிக்கப் பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ஹரியாணாவைச் சேர்ந்த இளம் சுழற்பந்து வீச்சாளர் ஜெயந்த் யாதவ் இடம்பெறுகிறார். கடந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரக்யான் ஓஜா, இந்தப் போட்டி யிலும் ஆஸ்திரேலிய பேட்ஸ் மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க் கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில் பான்கிராப்ட், டிராவிஸ் ஹெட், ஹேண்ட்ஸ்காம்ப், ஸ்டாய்னிஸ் ஆகியோர் கடந்த போட்டியில் ஓரளவு சிறப்பாக ஆடினர். அவர்கள் இந்த ஆட்டத்திலும் ஆஸ்திரேலியாவுக்கு பலம் சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. ஆஸ்திரேலிய கேப்டன் கவாஜா, தங்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை. அதேநேரத்தில் சுழற்பந்து வீச்சாளர் ஓ’கீப் சிறப்பாக பந்துவீசினார். அவர் கடந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும், 2-வது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

மைதானம் எப்படி?

கடந்த போட்டியின்போது மைதானம் சுழற்பந்து வீச்சாளர் களுக்கு சாதகமாக இருந்ததால் பேட்ஸ்மேன்களால் பெரிய அளவில் ரன் குவிக்க முடிய வில்லை. வேகப்பந்து வீச்சும் எடுபடவில்லை. 2-வது போட்டியில் மைதானம் வேகப்பந்து வீச்சாளர் களுக்கு சாதகமாக இருக்கும் என தெரிகிறது.

போட்டி நேரம்: காலை 10

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x