Published : 02 Jul 2015 09:03 PM
Last Updated : 02 Jul 2015 09:03 PM
இங்கிலாந்தில் நடைபெற்ற காட்சிப் போட்டி ஒன்றில் ஒரு கையில் ஐஸ்கீரீமை வைத்துக் கொண்டே மற்றொரு கையில் கேட்ச் பிடித்து அசத்தியுள்ளார் ஆஸ்திரேலிய அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல்
இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் சிட்னி மார்னிங் ஹெரால்ட் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:
இங்கிலிஷ் கிளப் அணியான யார்க் ஷயர் அணிக்கும், பார்ட்ஸே என்ற கிராமப்புற கிளப் அணிக்கும் இடையே நடைபெற்ற காட்சிப் போட்டி ஒன்றில் யார்க்ஷயர் அணிக்கு ஆடிய கிளென் மேக்ஸ்வெல், எல்லைக்கோட்டருகே 'கார்னெட்டோ' ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது பார்ட்ஸே அணி பேட்ஸ்மென் எட் கிளேய்ட்டன் ஒரு பந்தை எல்லைக்கோட்டுக்கு தூக்கி அடிக்க, அங்கு நின்று கொண்டிருந்த கிளென் மேக்ஸ்வெல் ஒரு கையில் ஐஸ்கிரீமை வைத்துக் கொண்டே மற்றொரு கையில் சற்றே எம்பி கேட்சைப் பிடித்தார்.
அவுட் ஆன பேட்ஸ்மென் எட் கிளேய்ட்டனே நின்று கைதட்டிவிட்டுச் சென்றுள்ளார்.
கேட்சைப் பிடித்த கிளென் மேக்ஸ்வெல், அடுத்த விநாடியே ஐஸ்கிரீமை ஒரு கடி கடித்தார். அதன் பிறகே கேட்ச் பிடித்த பந்தை விக்கெட் கீப்பருக்கு அனுப்பினார்.
ஐஸ் கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் பந்திலிருந்து கண்களை எடுக்கவில்லை மேக்ஸ்வெல், என்று ஆஸ்திரேலிய ஊடகம் விதந்தோதி எழுதியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT