Published : 13 Jul 2015 09:34 AM
Last Updated : 13 Jul 2015 09:34 AM

வெற்றி பெருமிதமளிக்கிறது: சானியா

விம்பிள்டன் போட்டியில் பெற்றுள்ள வெற்றி பெருமிதமளிக்கிறது என டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: விம்பிள்டன் வெற்றி இந்திய பெண்களுக்கு வாழ்வில் மிகப்பெரிய இலக்கை எட்ட ஊக்கமாக அமையும் என நம்புகிறேன். நான் விளையா டினேன்; வெற்றி பெற விரும்பினேன். அதற்காகத்தானே விளையாடுகிறோம்.

இப்போட்டி நம்ப முடியாத அளவுக்கு வியப்பாக இருந்தது. நாங்கள் பின்தங்கி யிருந்தபோதுகூட, எங்களின் முழுத் திறமையையும் வெளிப்படுத்தி னோம் என எங்களுக்குத் தெரியும்.

இத்தருணத்துக்காகத்தான் பல ஆண்டுகளாக பயிற்சி பெற்றோம். எதற்காக வாழ்கிறோமோ அதை அடைவதற்காக காத்திருந்தோம். இவ்வெற்றியால் கவுரவிக்கப்பட்டுள்ளோம். 2-5 எனப் பின்தங்கி யிருந்தபோது கூட, நாங்கள் தோற்றுவிடுவோம் என நினைக்கவில்லை.

நானும் ஹிங்கிஸும் ஒருவருக்கொருவர், “அவர்கள் வெற்றி பெறட்டும். நாம் இப்போட்டியைத் தோற்கப்போவதில்லை. நாம் சரியாகவே விளையாடுவோம்” என்று சொல்லிக் கொண்டோம். விம்பிள்டன் பட்டம் வென்றுள்ளோம் என நினைக்கும்போதே மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

குவியும் வாழ்த்துகள்

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிகச்சிறப்பான ஆட்டம் ஹிங்கிஸ்-சானியா. நீங்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விம்பிள்டனில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளீர்கள். உங்களால் நாங்கள் பெருமையடைகிறோம், மகிழ்ச்சியடைகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது வாழ்த்துச் செய்தியில், “கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற வகையில், நீங்கள் இந்திய இளைஞர்கள் குறிப்பாக இளம்பெண்களுக்கு ஊக்கமளித்துள்ளீர்கள். இந்த வெற்றிக் கொண்டாத்தில் உங்கள் குடும்பத்துடன், தேசமும் இணைந்து கொள்கிறது. இந்தியா வுக்காக இன்னும் ஏராளமான வெற்றிகளைப் பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் உட்பட பல்வேறு பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் சானியாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x