Published : 29 Jul 2015 09:48 AM
Last Updated : 29 Jul 2015 09:48 AM

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஆஷஸ் டெஸ்ட் இன்று தொடக்கம்

இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 3-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் இன்று தொடங்குகிறது.

5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முதல் இரு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. முதல் போட்டியில் 169 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து, அடுத்த போட்டியில் 405 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்டது.

குக் தலைமையிலான இங்கி லாந்து அணி, படுதோல்வியி லிருந்து மீள வேண்டிய கட்டாயத் திலும், கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கடந்த போட்டியைப் போலவே சிறப்பாக ஆடி வெற்றியைத் தொடரும் முனைப்பிலும் இந்த போட்டியில் களம் காண்கின்றன.

தடுமாறும் இங்கிலாந்து

இங்கிலாந்து அணி சமபல மில்லாத அணியாக தடுமாறிக் கொண்டிருக்கிறது. எனவே அந்த அணியை சமபலம் கொண்ட அணியாக மாற்றுவதற்கு சில மாற்றங்கள் அவசியமாகும். கேரி பேலன்ஸ் நீக்கப்பட்டுவிட்டதால், இந்தப் போட்டியில் இயான் பெல் 3-ம் நிலை வீரராகவும், ஜோ ரூட் 4-ம் நிலை வீரராகவும் களமிறங்கவுள்ளனர். கேரி பேலன்ஸுக்குப் பதிலாக இடம்பெற்றுள்ள ஜானி பேர்ஸ்டோவ் 5-ம் நிலை வீரராக களமிறங்குகிறார்.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில் கேப்டன் குக், ஜோ ரூட், இயான் பெல், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி என வலுவான பேட்ஸ்மேன்கள் இருந்தபோதிலும், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் தவிர யாரும் தொடர்ச்சியாக ரன் குவிக்காதது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. குறிப்பாக கேப்டன் குக்-ஆடம் லித் ஜோடி சிறப்பான தொடக்கம் ஏற்படுத்தித் தருவது மிக முக்கியமானதாகும்.

மார்க் உட் ஆடுவாரா?

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், மார்க் உட் கூட்டணி பலம் சேர்க்கிறது. இவர்களில் மார்க் உட்டுக்கு இன்று காலையில் உடற்தகுதி சோதனை நடத்தப்படுகிறது. அதனடிப்படையிலேயே அவர் விளையாடுவாரா, இல்லையா என்பது உறுதி செய்யப்படும். சுழற்பந்து வீச்சில் மொயீன் அலியை நம்பியுள்ளது இங்கிலாந்து.

மிரட்டும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில் அறிமுகப் போட்டியில் அசத்தலாக ஆடியதன் மூலம் அணியில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார் விக்கெட் கீப்பர் பீட்டர் நெவில். 2-வது போட்டியின்போது மயங்கி விழுந்த கிறிஸ் ரோஜர்ஸ் பூரண குணமடைந்துவிட்டதால் அவரும் இன்றைய போட்டியில் களமிறங்குகிறார். எனவே ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது.

ஆஸ்திரேலிய அணி கிறிஸ் ரோஜர்ஸ், டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் என பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. இவர்களில் கிறிஸ் ரோஜர்ஸ் கடந்த போட்டியில் 173 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் இரட்டை சதமும் அடித்தனர். எனினும் கேப்டன் கிளார்க் தொடர்ந்து தடுமாறி வருவது கவலையளிக்கிறது.

வேகப்பந்து வீச்சில் மிட்செல் ஜான்சன், மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹேஸில்வுட் கூட்டணியை நம்பியுள்ளது ஆஸ்திரேலியா. கடந்த போட்டியில் 6 விக்கெட் டுகளை வீழ்த்திய ஜான்சன், இந்தப்போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத் தலாக இருப்பார் என எதிர் பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சில் நாதன் லயனை நம்பி யுள்ளது ஆஸ்திரேலியா.

இதற்கு முன்னர் இங்கு 2005-ல் நடைபெற்ற பரபரப்பான டெஸ்ட் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டுள்ளது ஆஸ்தி ரேலியா. அதன்பிறகு 2009-ல் நடைபெற்ற டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது குறிப்பிடத் தக்கது.

மைதானம் எப்படி?

போட்டி நடைபெறும் எட்பாஸ் டன் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என தெரிகிறது. அதிக அளவில் பந்துகள் எகிறும் என எதிர்பார்க்கப்டுகிறது.

போட்டி நேரம்: பிற்பகல் 3.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

சாதனையை நோக்கி…

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 11 பேர் மட்டுமே 2000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இந்த டெஸ்ட் போட்டியின்போது ஸ்டூவர்ட் பிராட், மிட்செல் ஜான்சன் ஆகியோர் அந்த வரிசையில் இணையலாம். ஸ்டூவர்ட் பிராட் 2,353 ரன்களையும், 296 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். ஜான்சன் 1,999 ரன்களையும், 299 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x