Published : 13 Jul 2015 09:31 AM
Last Updated : 13 Jul 2015 09:31 AM

ஆஷஸ் டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலியாவை 169 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை 169 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது. இதன் மூலம் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இங்கிலாந்தின் கார்டிஃப்பில் கடந்த 8-ம் தேதி முதல் டெஸ்ட் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 102.1 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 134, மொயீன் அலி 77, கேரி பேலன்ஸ் 61 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியத் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளையும், ஹேஸில்வுட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 84.5 ஓவர்களில் 308 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிறிஸ் ரோஜர்ஸ் 95 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும், ஸ்டூவர்ட் பிராட், மொயீன் அலி, மார்க் உட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்ஸில் 122 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து 289 ரன்களில் ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இயான் பெல், ஜோ ரூட் ஆகியோர் தலா 60 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 42 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன் 4 விக்கெட்டுகளையும், ஜான்சன், ஹேஸில்வுட், ஸ்டார்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத் தனர்.

இரண்டு நாள் அவகாசத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு 412 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக் கப்பட்டது.

ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள் கிறிஸ் ரோஜர் 10 ரன்களிலும், வார்னர் 52 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ஸ்மித் 33 ரன்களில் வெளியேறினார். ஸ்டூவர்ட் பிராடின் பந்து வீச்சில் அனல் பறந்தது. 101 ரன்களில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து 5 ரன்களைச் சேர்ப்பதற்குள் ஆஸ்திரேலியா மேலும் 2 விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் கிளார்க்கை 4 ரன்களில் வெளியேற்றினார் பிராட்.

அதன் பின்னர் சரிவைத் தடுக்க முயன்று நிதானமாக ஆடிய வோஜஸ் 16 பந்துகளைச் சந்தித்து ஒரு ரன் எடுத்திருந்த நிலையில் வுட் பந்துவீச்சில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் ஹாடின், மொயீன் அலி சுழலில் 7 ரன்களுக்கு வெளியேறினார். தோல்வி உறுதி என்ற நிலையில் களமிறங்கிய மிட்செல் ஜான்சன் நேர்த்தியாகவும் அதிரடியாகவும் விளையாடினார். மறுமுனையில் ஸ்டார்க்கை வைத்துக் கொண்டு, இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை வெறுப்பேற்றினார்.

ஸ்டார்க்-ஜான்சன் ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்து. இந்த ஜோடியை ஜோ ரூட் பிரித்தார். ஸ்டார்க் 17 ரன்களில் வெளியேறினார். இதனிடையே ஜான்சன் 70 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

தொல்லை கொடுத்த ஜான்சனை வெளியேற்றினார் ஜோ ரூட். ஜான்சன் 94 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 77 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் ஜான்சன் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோராகும்.

ஹாஸில்வுட் 14 ரன்களில் மொயீன் அலிக்கு இரையாக, ஆஸ்திரேலியா 70.3 ஓவர்களில் 242 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 169 ரன்கள் வித்தி யாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று, ஆஷஸ் தொடரை அட்டகாசமாகத் தொடங்கி யிருக்கிறது. ஆட்டநாயகனாக ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டார்.

ஆஷஸ் டெஸ்ட் தொடங்கு வதற்கு முன்பாக ஆஸ்திரேலியா தனது வழக்கமான வார்த் தைப் பிரயோகங்களைப் பயன் படுத்தியது.

ஆனால், முதல் டெஸ்டிலேயே 169 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, ஆஸ்திரேலியாவுக்கு பாடம் புகட்டியிருக்கிறது இங்கி லாந்து.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x