Last Updated : 10 Aug, 2017 04:44 PM

 

Published : 10 Aug 2017 04:44 PM
Last Updated : 10 Aug 2017 04:44 PM

உலகத் தடகளம்: 5000மீ ஓட்டத்தில் லஷ்மணன் சொந்த சாதனை, இறுதிக்கு தகுதி பெறவில்லை

லண்டனில் நடைபெறும் உலகத் தடகள சாம்பியன்ஷிப் ஆடவர் 5,000மீ ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் கோவிந்தன் லஷ்மணன் தன்னுடைய சொந்தச் சாதனையை நிகழ்த்தினார், ஆனால் அது இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற போதுமானதாக இல்லை.

27 வயதான கோவிந்தன் லஷ்மணன் 5000மீ ஓட்டத்தில் 13 நிமிடங்கள் 35.69 விநாடிகளில் இலக்கை எட்ட முடிந்தது .முன்பு இவர் 13:36.62 என்ற காலநேரத்தில்தான் இந்த இலக்கை எட்டியிருந்தார், தற்போது தன் சொந்த மைல்கல்லை தாண்டியுள்ளார். ஆனால் 15-வது இடத்தில் முடிந்ததால் இறுதி வாய்ப்பு இல்லாமல் போனது.

முந்தைய சாம்பியனான பிரிட்டனின் மோ ஃபராவுடன் ஓடும் வாய்ப்பைப் பெற்றார் லஷ்மணன். அமைந்தது. ஆனால் லஷ்மணன் மட்டுமே தன் சொந்தச் சாதனையை முறியடித்த இந்திய தடகள வீரராகத் திகழ்கிறார். டிராக் மழையினால் பாதிப்படைந்திருந்த நிலையில் கடினமான ஓட்டமானது, ஆனாலும் லஷ்மண் ஓட்டம் சிறப்பாகவே அமைந்தது.

“இது எனது முதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியாகும், தேசிய சாதனையை முறியடிக்கலாம் என்ற எண்ணத்தில்தான் வந்தேன், என்னால் முடியவில்லை, குறைந்தது என் முந்தைய வேகத்தைக் கடக்க முடிந்ததில் மகிழ்ச்சி. நான் ஏமாற்றமடையவில்லை, நான் சிறப்பாக முயற்சி செய்தேன், நான் மீண்டும் கடுமையாகப் பயிற்சி செய்து தேசியச் சாதனையை முறியடிப்பேன்” என்றார்.

5000மீ தேசியச் சாதனையை வைத்திருப்பவர் பஹதூர் பிரசாத் இவர் 13:29.70 நிமிடங்களில் இலக்கை எட்டி தேசிய சாதனையை 25 ஆண்டுகளாக வைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x