Published : 09 Aug 2017 10:33 AM
Last Updated : 09 Aug 2017 10:33 AM

உலக சாம்பியன்ஷிப்தொடரில் சிந்துவுக்கு 4-ம் நிலை அந்தஸ்து

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் கலந்து கொள்ளும் இந்திய வீராங்கனையான பி.வி.சிந்துவுக்கு போட்டித் தரவரிசையில் 4-வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் வருகிற 21-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடரில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மகளிர் பிரிவில் சீனாவின் டாய் ஸூ யிங்குக்கு முதல் நிலை அந்தஸ்தும், ஜப்பானின் யமகுச்சிக்கு 2-வது இடமும் வழங்கப்பட்டுள்ளது.

இரு முறை சாம்பியனும், ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவரான ஸ்பெயினின் கரோலினா மரினுக்கு 3-வது இடமும், உலக சாம்பியன்ஷிப் தொடரில் இரு முறை வெண்கலப் பதக்கமும், ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்துவுக்கு 4-வது இடமும் கொடுக்கப்பட்டுள்ளது. உலகத் தரவரிசையில் 16-வது இடம் வகிக்கும் இந்தியாவின் சாய்னா நெவாலுக்கு போட்டித் தரவரிசையில் 12-வது இடம் வழங்கப்பட்டுள்ளது. அவர் 2015-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு போட்டித் தரவரிசையில் 8-வது இடம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த் சமீபத்தில் இந்தோனேஷியா, ஆஸ்திரேலிய ஓபனில் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x