Published : 01 Jul 2017 11:34 AM
Last Updated : 01 Jul 2017 11:34 AM

என் மனதில் 250 ரன்கள் என்ற இலக்கே இருந்தது: ஆட்ட நாயகன் தோனி கருத்து

மே.இ.தீவுகளுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் தோனியின் அரைசதத்தினாலும் ஸ்பின்னர்களினாலும் இந்திய அணி 251 ரன்கள் இலக்கை திறம்பட வெற்றியாக மாற்றியது.

ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற தோனி, கூறியதாவது:

வயதானாலும் மெருகு கூடுகிறது என்ற ரீதியில் கேள்வி கேட்கப்பட அதற்கு தோனி, ‘இட்ஸ் லைக் வைன்’ என்றார்.

மேலும், “கடந்த ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளாக அணியின் டாப் ஆர்டர் பெரிய அளவில் ரன்களைக் குவித்து வருகின்றனர். எனவே எனக்கும் ரன்கள் எடுக்க வாய்ப்புக் கிடைத்து குறித்து நல்லதாக உணர்கிறேன். இடைப்பட்ட ஓவர்களில் ஸ்கோர் மந்தமானதற்குக் காரணம் பிட்சின் தன்மை, பவுன்சில் சீரற்ற தன்மை இருந்தது, பந்து வரும் வேகத்திலும் கூட சீரற்ற தன்மை இருந்தது, ஆனால் அந்தத் தருணத்தில் பார்ட்னர்ஷிப் கட்டமைப்பது முக்கியமாகப் பட்டது.

நான் என் மனதில் 250 ரன்களையே இலக்காக நிர்ணையித்திருந்தேன். அதை எட்டினோம், இந்த ரன் எண்ணிக்கையை பவுலர்களும் வெற்றியாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருந்த்து. ஆனாலும் அவர்கள் நன்றாக வீசுவது முக்கியம்.

ஸ்பின்னர்களுக்கு அறிவுரைகள் வழங்குவது அவசியம். ஐபிஎல், டி20 போட்டிகள் என்று குல்தீப் நிறைய ஆடினாலும் சர்வதேச மட்டத்தில் வேறுபட்ட அல்லது மாற்றுப் பந்துகளை எப்போது வீச வேண்டும் என்பதை அறிந்திருப்பது அவசியமாகிறது. 5-10 ஆட்டங்களில் அனுபவம் பெற்ற பிறகு குல்தீப் யாதவ்வே இதனை உணர்ந்தறிவார்.

கடந்த போட்டியை ஒப்பிடும் போது குல்தீப் இந்தப் போட்டியில் அவர் நன்றாகவே வீசினார்” என்றார் தோனி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x