Published : 20 Jul 2017 10:03 AM
Last Updated : 20 Jul 2017 10:03 AM

3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார் அஸ்வின்

டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று வெளியிட்டது. இதில் பந்து வீச்சாளர்களுக்கான பட்டியலில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், 2-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அவர் மொத்தம் 865 புள்ளிகளைப் பெற்றுள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரெங்கனா ஹெராத், 2-வது இடத்துக்கு முன்னேறினார். அவர் மொத்தம் 866 புள்ளிகளைப் பெற்றுள்ளார். மற்றொரு இந்திய பந்து வீச்சாளரான ஜடேஜா இந்த பட்டியலில் 898 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் ஹசல்வுட், இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஆண்டர்சன் ஆகியோர் தலா 826 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளனர்.

சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், 941 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார். இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் 2-வது இடத்திலும், நியூஸிலாந்து வீரர் வில்லியம்சன் 3-வது இடத்திலும் உள்ளனர். இந்திய அணியின் பேட்ஸ்மேன் புஜாரா 846 புள்ளிகளுடன் இந்த பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் 6-வது இடத்தில் கோலியும், 10-வது இடத்தில் கே.எல்.ராகுலும் உள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் சிறப்பாக ஆடிய தென் ஆப்ரிக்க வீரர் ஹசிம் ஆம்லா, 7 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x