Published : 23 Jul 2017 10:32 AM
Last Updated : 23 Jul 2017 10:32 AM

பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்தது

இலங்கை பிரசிடன்ட் அணிக்கு எதிரான 2 நாள் பயிற்சி ஆட்டத்தை இந்திய அணி டிரா செய்தது.

கொழும்பு நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரசிடென்ட் லெவன் அணி முதல் இன்னிங்ஸில் 55.5 ஓவர்களில் 187 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக குணதிலகே 74, லகிரு திரிமானே 59 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4, ஜடேஜா 3, மொகமது ஷமி 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 54, அபினவ் முகுந்த் 0, புஜாரா 12 ரன்களில் ஆட்டம் இழந்தனர். விராட் கோலி 34 ரன்களுடனும், ரஹானே 30 ரன்களுடனும் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடினார்கள். விராட் கோலி 53, ரஹானே 40 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டயர்டு முறையில் வெளியேறினார்கள். இதையடுத்து களமிறங்கிய ரோஹித் சர்மா 38, ஷிகர் தவண் 41 ரன்கள் சேர்த்தனர். இவர்களும் ரிட்டயர்டு முறையில் ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 68 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 312 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. விருத்திமான் சாஹா 36 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி 125 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில் பிரசிடன்ட் அணி 2-வது இன்னிங்ஸை தொடங்காமலேயே ஆட்டம் முடிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

பயிற்சி ஆட்டத்தை தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி மோத உள்ளது. இதன் முதல் ஆட்டம் வரும் 26-ம் தேதி காலே நகரில் தொடங்குகிறது.

- ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x